kodanad murder accused arrested in kerala

கொட நாடு காவலாளி கொலையில் முக்கிய குற்றவாளியான குட்டியை கேரளாவில் வைத்து போலீசார் கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொட நாடு காவலாளி ஓம்பகதூர் கடந்த மாதம் 23ம் தேதி 11பேர் கொண்ட கும்பலால் கை,கால்களை கட்டிப்போடப்பட்டு கொலை செய்யப்பட்டார். மேலும் பங்களாவில் இருந்து முக்கிய ஆவணங்களும் கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பாக இதுவரை போலீசார் 8 பேரை கைது செய்துள்ளனர்.

ஜெயலலிதாவின் முன்னால் கார் ஓட்டுனர் கனகராஜ் விபத்தில் உயிரிழந்து விட்டார். மற்றொரு குற்றவாளியான சயன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தலைமறைவாக உள்ள கேரளாவை சேர்ந்த குட்டி என்றவரை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டு தீவிர தேடுதலில் போலீசார் ஈடுபட்டனர். 

நேற்று இரவு குட்டியை கேரளாவின் தலைநகரத்தில் வைத்து கைது செய்துள்ளனர். அவரை தற்போது ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று மத்திய மாநில அதிகாரிகள் ஊட்டிக்கு சுற்றுல்லா சென்ற போது அவர்கள் கொடநாடு பங்களாவை பார்க்க சென்றனர். உடனே வருமான வரி சோதனை என்ற தவறான செய்திகளும் வெளியானது.

இதனிடையில் கொட நாடு பங்களாவை நேற்று மர்ம நபர் ஒருவர் முற்றிலுமாக வீடியோ படம் எடுத்துள்ளார். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வருவதற்கு முன் படம் எடுத்தவர் தப்பி ஓடி விட்டார்.

அவரை பிடிக்க போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர். கொட நாட்டில் அடுத்தடுத்து நடந்து வரும் மர்மங்கள் தலைசுற்ற வைக்கிறது.