திருவள்ளூரிலுள்ள ஸ்ரீநிகேதன் பள்ளியில், பெண்களுக்கான "கிராவ் மாகா' என்னும் தற்காப்புப் பயிற்சி சனிக்கிழமை அளிக்கப்பட்டது.
பயிற்சியை பள்ளியின் தாளாளர் விஷ்ணு சரண் தொடங்கி வைத்தார். பள்ளி இயக்குநர் பரணிதரன் முன்னிலை வகித்தார்.
இப்பயிற்சி குறித்து தாளாளர் விஷ்ணு சரண், “இஸ்ரேலிய நாட்டு தற்காப்புக் கலையான "கிராவ் மாகா'-வை கற்பது எளிது. சாதாரண உடல்நிலையில் இருப்பவர்கள் கூட இப்பயிற்சியின் மூலம் தங்களை பாதுகாத்துக் கொள்ளலாம்.
இயல்பு வாழ்க்கையில் பொதுமக்கள் சந்திக்கும் பிரச்சனைகளில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வது எப்படி என்பது குறித்து பயிற்சி முறையில் விளக்கப்படுகிறது.
இதனால் பள்ளி மாணவிகளிடையே தன்னம்பிக்கையும், மன உறுதியும் வளரும்.
பள்ளியில் 6-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் 650 மாணவிகளுக்கு தினம்தோறும் இப்பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதை, தற்காப்புப் பயிற்சியாளர் ஸ்ரீராம் முன்னின்று நடத்தி வருகிறார் என்றார்.
