killer call to midnight

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் குடும்பத்துடன் ஒருவர் குடியிருந்து வருகிறார். இவருக்கு சில நாட்களுக்கு முன்பு நள்ளிரவின்போது தொலைபேசி
அழைப்ழு ஒன்று வந்துள்ளது. அப்போது பேசியவர், பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.

பணம் தரவில்லை என்றால், கொலை செய்துவிடுவதாகவும் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், தன்னுடைய செல்போனில் ரெக்கார்ட் செய்யப்பட்ட
உரையாடலுடன் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள போலீஸ் நிலையத்துக்கு சென்று கூறினார். அந்த ஆடியோவில்,

பணம் ரெடி பண்ணிட்டியா?

யார் பேசுறது?

நேத்து அவ்வளவு தெளிவா பேசியிருக்கேன். இப்ப வந்து யார் பேசுறதுன்னு கேட்கிற?

நான் ஏன் பணம் கொடுக்கணும்?

நீ படித்தவன்... நேத்து நான் பேசினதை ரெக்கார்டுகூட பண்ணியிருக்கலாம்.

உன் மனைவியை கொலை செய்ய முடியும். உன்னைக்கூட போட முடியும், உன் குழந்தையைப்போட டியும். ப்ரூஃப் பண்ணி காட்டட்டுமா?

உங்களுக்கு என்ன வேணும்.

பணத்துக்காக என்ன வேணுமானாலும் செய்யுற கூட்டம் இருக்கும் வரை என்னை மாதிரி இருக்கிறவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். பணத்துக்காக கொலை,
கொள்ளையடிப்பவர்கள் கூட்டத்தினரிடம் நீ மாட்டுவதற்கு முன், என் கையில் நீ மாட்டியிருக்கிற. உன் கிட்ட நான் என்ன கேட்டேன். உன் மனைவிக்கு விபத்து
ஏற்பட்டு மருத்துவமனையில் பணம் செலவானதா வைச்சிக்கோ... 

போலீஸ்கிட்ட போவேன்னா போ... என்னை நீ எதுவும்செய்ய முடியாது. என்னால உன் வீட்டுல
யார் யாரை போட முடியுமோ, அவர்களை ஈசியா போட முடியும். இப்ப சொல்லு. நீ வேலைபார்க்கிற இடத்திலேயே வந்து உன்னைக் கொல்லுவேன்... பேப்பர்ல
செய்தி வர்ற மாதிரி வெட்டிக்கொலை... குத்திக்கொலை மாதிரி இல்ல... இது வேற மாதிரி டா... என்று ஆடியோ முடிகிறது.

ஆடியோவை கேட்ட போலீஸ் அதிகாரிகள் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், மனநலம்
பாதிக்கப்பட்ட ஒருவர்தான் போனில் மிரட்டியுள்ளது தெரியவந்தது. இதை அடுத்து சம்பந்தப்பட்ட அந்த நபரை மனநல காப்பகத்தில் போலீசார் அடைத்தனர். இது
மட்டுமல்லாமல், கிழக்கு கடற்கரை சாலையில் மட்டும் 10 பேருக்கு மிரட்டல் போன் கால்கள் வந்துள்ளதாக போலீசாருக்கு தகவல் வந்துள்ளது. விரைவில் அந்த
கும்பலை பிடித்து விடுவோம் என்று போலீசார் கூறியுள்ளனர்.