Kill two kids with poisoned injuries Even the mother committed suicide! Police investigation

தனது 2 மகன்களுக்கு விஷ ஊசி போட்டு கொலை செய்த தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஈரோட்டில் நடந்துந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு மாவட்டம், சம்பத் நகர் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் ஸ்ரீஜா. இவர் கேரள மாநிலத்தை சேர்ந்தவர். இவரது கணவர் ரவீந்திரன் சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். ஸ்ரீஜா, தனது மகன்கள் பிரணீத், சதீஷ் ஆகியோருடன் வசித்து வந்தார். ஸ்ரீஜா, தனியார் மருத்துவமனை ஒன்றில் வரவேற்பாளராக பணியாற்றி வந்துள்ளார்.

இந்த நிலையில் ஸ்ரீஜாவின் வீடு இன்று வெகு நேரமாகியும் திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த பக்கத்து வீட்டில் வசிப்போர், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதன் பின்னர், சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், வீட்டின் கதவை உடைத்து திறந்து பார்த்தனர். அப்போது, ஸ்ரீஜா மற்றும் இரண்டு குழந்தைகள் சடலமாக கிடந்துள்ளனர். மேலும், ஸ்ரீஜா எழுதியதாக கடிதம் ஒன்றையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

உடல்களைக் கைப்பற்றிய போலீசார், ஈரோடு உள்ள அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். ஸ்ரீஜா தனது மகன்களுக்கு விஷ ஊசி போட்டு கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொள்வதாக கடிதத்தில் எழுதியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.