சினிமா பைனான்சியர் முகுந்த் சந்த் போத்ராவின் மகள் கரிஷ்மா போத்ரா கடந்த 2 நாட்களுக்கு முன்பு கடத்தப்பட்டதாக போலீசில் புகார் கூறியுள்ளார்.

பிரபல சினிமா பைனான்சியர் முகந்த் சந்த் போத்ரா. சென்னை, தியாகராக நகரில் உள்ள ஆந்திரா கிளப் அருகே குடும்பத்துடன் வசித்து வருகிறார் போத்ரா. 

போத்ரா கடந்த ஆண்டு கந்து வட்டி புகாரில் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கடன் கொடுத்தவர்களிடம் அதிக வட்டி கேட்டு
மிரட்டியதாக போத்ரா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பாக குண்டர் சட்டத்திலும் அவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

சிறையில் இருந்து வெளியே வந்த போத்ரா, தனது தொழிலில் கவனம் செலுத்தி வந்தார். இந்த நிலையில் அவர் நேற்று தியாகராக நகர் போலீஸ் துணை
ஆணையரை சந்தித்து தனது மகள் கரிஷ்மா போத்ரா கடந்த 2 நாட்களாக காணவில்லை என்று புகார் கொடுத்திருந்தார். 

போலீசார், போத்ராவின் புகார் குறித்து விசாரணை நடத்தி வருகினறனர். 30 வயதான கரிஷ்மா போத்ராவுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. காதல்
விவகாரம் காரணமாக கரிஷ்மா, வீட்டை விட்டு வெளியேறியுள்ளாரா? அல்லது அவர் உண்மையிலேயே கடத்தப்பட்டுள்ளாரா? என்பது குறித்து போலீசார்
தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.