நாகப்பட்டினம் - இலங்கையின் காங்கேசன்துறை இடையே பயணிகள் படகு சேவை - கையெழுத்தான ஒப்பந்தம்! முழு தகவல்!
இலங்கை காங்கேசம் துறைமுகத்தை, மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அரசு 287 கோடி மதிப்பில் புதுப்பித்துள்ளது.
இரண்டு நாள் பயணமாக இந்தியா வருகை தந்துள்ள இலங்கை அதிபர் திரு. ரனில் விக்கிரமசிங்கே அவர்கள், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களை இன்று நேரில் சந்தித்து உரையாடினார். அந்த சந்திப்பில் கலந்து ஆலோசிக்கப்பட்ட விஷயங்களை தற்போது வெளியிட்டுள்ளார் பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள்.. அவர் வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு..
இலங்கைத் தமிழ் மக்கள் வாழ்வு மேம்படவும், அவர்களின் பொருளாதாரம் வளர்ச்சி பெறவும், பல்வேறு திட்டங்களையும் நிதி உதவிகளையும் தொடர்ந்து செய்து வரும் மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான நமது மத்திய அரசு, தொடர்ந்து செய்யவிருக்கும் பணிகள் குறித்து இந்த சந்திப்பில் முடிவாகின.
"இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையேயான விமானப் போக்குவரத்தை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், இலங்கை தமிழர்கள் பகுதியில் சுற்றுலா, தொழிற்துறை மற்றும் பொருளாதார வளர்ச்சி மேம்படும். மேலும், தமிழகத்தின் நாகப்பட்டினம் மற்றும் இலங்கையின் காங்கேசன்துறை இடையே பயணிகள் படகு சேவையை தொடங்க மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி அவர்கள் மற்றும் இலங்கை அதிபர் ரனில் விக்கிரமசிங்கே இடையேயான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது".
தமிழகம் முழுவதும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் ஒரே பாடத்திட்டம்: அமைச்சர் பொன்முடி!
ஈழத்துக்கும் தமிழகத்துக்கும் உள்ள தொடர்பு சங்க காலம் முதலே தொடர்ந்து வருவது. சங்க இலக்கியமான பட்டினப்பாலையில், ஈழத்து உணவும் காழகத்து ஆக்கமும் பூம்புகார் துறைமுகத்தில் குவிந்து கிடந்தன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்தகைய தொன்மையுள்ள தமிழகம் இலங்கை இடையேயான கப்பல் போக்குவரத்துத் தொடர்பு, 1960களில் ஏற்பட்ட புயலால் பாதிக்கப்பட்டு, நிறுத்தப்பட்டது. இலங்கையின் உள் நாட்டுப் போரினால் பாதிப்படைந்த இலங்கை காங்கேசம் துறைமுகத்தை, மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அரசு 287 கோடி மதிப்பில் புதுப்பித்து, தற்போது மீண்டும் தமிழகம் இலங்கை இடையேயான கப்பல் போக்குவரத்தைத் தொடங்கவுள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க தமிழர்கள் பாரம்பரியமும், ஈழத் தமிழர்களுடனான கலாச்சாரத் தொடர்பும் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
என்று அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார், இன்னும் பல தகவல்களை அவர் அந்த அறிக்கையில் வெளியிட்டுள்ளார், குறிப்பாக நாகை மற்றும் இலங்கையின் காங்கேசன்துறை இடையிலான பயணிகள் படகு சவாரி முக்கிய விஷயமாக பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் வேளாண் வறட்சி பகுதிகளாக அறிவிப்பு- எந்த எந்த மாவட்டங்கள் என தெரியுமா.?