நடிகை பாவனா கடத்தப்பட்டு, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில் சதித்திட்டம் ஏதேனும் தீட்டப்பட்டுள்ளதா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்துவார்கள் என்று கேரள மாநில அரசு தெரிவித்துள்ளது.
பலாத்காரம்
நடிகை பவானா கடந்த வெள்ளிக்கிழமை கொச்சியில் படப்படிப்பு முடிந்து,திருச்சூருக்கு காரில் திரும்பிக் கொண்டு இருந்தார். அப்போது அவரை வேனில் பின்தொடர்ந்த 4 பேர், அவர் கார் மீது மோதி தடுத்து நிறுத்தினர்.
அதன்பின், காருக்குள் அந்த 4 பேரும் ஏறி ஏறக்குறைய 2 மணிநேரம் காரை ஓட்டிச் சென்று, பாவனாவை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து, அதை வீடியோவாகவும், புகைப்படமாகவும் எடுத்தனர்.
கைது
இது தொடர்பாக பாவனா கொச்சி போலீசில் புகார் செய்ததையடுத்து, நடிகை பாவனாவின் கார் டிரைவர் மார்டின் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் உள்ள அனைத்து கிரிமினல் சதித்திட்டங்கள் அனைத்தும் விசாரணை செய்யப்படும். நடிகை பாவனா தனது வாக்குமூலத்தில் பல விசயங்களை தெரிவித்துள்ளார், அதை வைத்து புலன் விசாரணை செய்யப்படும்.
தனிப்படைகள்
ஒரு அறிவார்ந்த பன்பட்ட சமூகத்தில் இதுபோன்ற சம்பவங்கள் முழுமையாக மாநிலத்தில் உள்ள சினிமாதுறையில் இருந்து ஒழிக்கப்பட வேண்டும்.
இந்த விவகாரத்தில் முக்கிய குற்றவாளியான பல்சர் சுனில், விக்கீஸ் ஆகியோரை கைது செய்ய பல்வேறு தனிப்படை அமைக்கப்பட்டு தமிழகம், கேரளாவில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளனர்'' எனத் தெரிவித்தார்.
தள்ளுபடி
இதற்கிடையே மணிகன்டன், சுனி, விக்கீஸ் ஆகியோர் டிரைவர் மார்ட்டின்வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து தங்களை இந்த வழக்கில் சேர்த்துள்ளதால், தங்களுக்கு முன்ஜாமின் வேண்டும் என்று கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
ஆனால், அதை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.அதேசமயம், வடிவல் சலிம், பிரதீப், மார்ட்டின் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
