சபரிமலையில் சாமி தரிசனம் முடித்துவிட்டு தமிழகம் திரும்பிக்கொண்டிருந்த பேருத்து விபத்துக்குள்ளனதில், அதில் பயணித்த தமிழக பக்தர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

சபரிமலை அய்யப்பன் கோயிலுக்குச் சென்றுவிட்டு தமிழகம் திரும்பும்போது பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. நண்பகல் நண்பகல் 1:15 மணியளவில் பேருந்து நிலக்கல் அருகே வந்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் குழந்தைகள் உட்பட தமிழகத்தை சேர்ந்த 68 பேர் பயணித்தனர். இவர்களில் 62 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.

விபத்து நடந்த இடத்தில் ஆம்புலன்ஸ் சேவை உடனடியாகக் கிடைக்கவில்லை. இதனால் காயமடைந்த பக்தர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து பற்றி தகவல் அறித்த காவல்துறையும் மீட்பு படையும் சம்பவ இடத்திற்கு விரைந்தது. தற்போது விபத்தில் காயமடைந்தவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

பிபிசி பஞ்சாபி ட்விட்டர் கணக்கு முடக்கம்: அம்ரித்பால் சிங் பற்றிய செய்தி எதிரொலி?

விபத்தில் காயமடைந்த பயணிகள் கோட்டயம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் பத்தனம்திட்டா மாவட்ட பொது மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிலரது நிலை கவலைக்கிடமாக உள்ளது என்றும் தகவல் கிடைத்துள்ளது.

பேருந்து விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்க தேவையான ஏற்பாடுகளை செய்யுமாறு மாவட்ட மருத்துவ அதிகாரிக்கு சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் உத்தரவிட்டார். இதனையடுத்து கொன்னி மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த மருத்துவகள் குழு பத்தனம்திட்டா மருத்துவமனைக்குச் சென்றுள்ளது. கோட்டயம் மருத்துவக் கல்லூரியும் தயார் நிலையில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாதம் ரூ.11,000 பென்ஷன் கொடுக்கும் எல்ஐசி ஜீவன் சாந்தி திட்டம்!

YouTube video player