மாதம் ரூ.11,000 பென்ஷன் கொடுக்கும் எல்ஐசி ஜீவன் சாந்தி திட்டம்!
ஜீவன் சாந்தி பாலிசியில் பணி ஓய்வுக்குப் பின் சிறப்பான பென்ஷன் பெற முடியும். எல்ஐசி வழங்கும் இந்தத் திட்டத்தில் ரூ.10 லட்சம் முதலீடு செய்யும் பாலிசிதாரர் பென்ஷன் தொகையாக மாதம் ரூ.11,192 கிடைக்கும்.
முதுமையில் வருவாய் பற்றிய கவலை இல்லாமல் நிம்மதியுடன் வாழ, இப்போதே பயனுள்ள முதலீடுகளைச் செய்வது நல்லது. அந்த வகையில் பணி ஓய்வுக்கு பிறகு நிலையான பென்ஷன் தொகையைப் பெற எல்ஐசியின் ஜீவன் சாந்தி திட்டம் ஒரு வரப்பிரசாதம்.
எல்ஐசி ஜீவன் சாந்தி திட்டத்தில் குறைந்தபட்சமாக ரூ.1.5 லட்சம் முதலீடு செய்ய வேண்டும். அதிகபட்ச முதலீட்டு வரம்பு ஏதும் இல்லை.
30 வயது முதல் 79 வயது வரை உள்ளவர்கள் எல்ஐசி ஜீவன் சாந்தி பாலிசியை எடுத்துக்கொள்ளலாம். பாலிசிதாரர் மரணம் அடைந்தால் அவரது வாரிசுதாரராக நியமிக்கப்படுபவருக்கு மாத ஓய்வூதியம் வழங்கப்படும்.
37 வயது நிரம்பிய நபர் இந்த பாலிசியில் இணைந்து ரூ. 20,36,000 முதலீடு செய்கிறார் என்றால் அவருக்கு ரூ.10,067 என்கிற அளவில் மாதந்தோறும் பென்சன் தொகை கிடைக்கும்.
எல்ஐசி புதிய ஜீவன் சாந்தி திட்டத்தில் தனிநபராக ரூ.10 லட்சம் முதலீடு செய்தால் 11,192 ரூபாய் மாத ஓய்வூதியம் பெறலாம். கூட்டாக முதலீடு செய்தால் அதிகபட்ச மாதாந்திர ஓய்வூதியம் ரூ.10,576 ஆகும்.