காவிரியில் இருந்து நாள்தோறும் 2000 கன அடி நீர் திறந்து விட வேண்டும் என கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் , தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என கர்நாடக அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.

காவிரி நீர் தொடர்பாக தமிழக – கர்நாடக அரசு அதிகாரிகளியேயான ஆய்வுக் கூட்டம் பெங்களூரில் நடைபெற்றது. இதில் தமிழக அரசின் பொதுப்பணித்துறை முதன்மைசெயலாளர் எஸ்.கே.பிரபாகர், முதல்-அமைச்சரின் முதன்மை செயலாளர் சிவதாஸ்மீனா,உள்ளாட்சி நிர்வாகம் மற்றும் தண்ணீர் வினியோகத்துறை முதன்மை செயலாளர்கே.பனிந்திரரெட்டி, காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர்பங்கேற்றனர்.

அந்த குழுவினர் கர்நாடக அரசின் தலைமை செயலாளர் சுபாஷ்சந்திர குந்தியா மற்றும்நீர்ப்பாசனத்துறை அதிகாரிகளை பெங்களூரு விதான சவுதாவில் சந்தித்து பேசினர்.இந்த கூட்டத்தில் தமிழ்நாட்டில் கடும் வறட்சி நிலவுவதாகவும், குடிநீர் தட்டுப்பாடுஏற்பட்டுள்ளதாகவும், அதனால் மனிதாபிமான அடிப்படையில் குடிநீர் பயன்பாட்டிற்காக 3டி.எம்.சி. காவிரி நீரை திறந்துவிடுமாறும் தமிழக அதிகாரிகள் கோரிக்கை விடுத்தனர்.

இதற்கு பதில் அளித்த கர்நாடக அதிகாரிகள், கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே உள்ளஅணைகளில் உள்ள நீர் இருப்பு மற்றும் தங்களுக்கு குடிநீருக்கு தேவையான தண்ணீர் அளவுஉள்ளிட்ட விஷயங்களை எடுத்து கூறினர். கர்நாடகத்திலும் கடும் வறட்சி நிலவுவதால் தற்போது காவிரி நீரை திறந்துவிட முடியாது என திட்டவட்டமாக மறுத்தனர்.