காவிரி ஆணையம் உத்தரவு

காவிரியிலிருந்து தமிழகத்திற்கு ஜூலை மாதம் திறக்க வேண்டிய தண்ணீரை திறந்து விட வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்து உள்ளது

டெல்லியில் நடைப்பெற்ற காவிரி மேலாண்மை ஆணைய முதற்கூட்டதில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.  

காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் மசூத் உசேன் தலைமையில் இன்று டெல்லியில் நான்கு மணி நேரம் கூட்டம் நடை பெற்றது

இந்த கூட்டத்தில், மாதா மாதம் தமிழகத்திற்கு எவ்வளவு தண்ணீர் திறக்க வேண்டும், தண்ணீர் திறப்பதற்கு போதுமான அளவிற்கு தண்ணீர் கர்நாடகாவில் இருப்பதை உணர்ந்த ஆணையம் இது குறித்து முடிவை எடுத்து உள்ளது.

நீர் பங்கீடு முறைக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த முக்கிய முடிவை எடுக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்திற்கு ஓடி வருது காவிரிநீர்..! 

இந்நிலையில் ஜூலை மாதம் தமிழகத்திற்கு திறக்க வேண்டிய 34 .86       டிஎம்சி தண்ணீரை திறந்து விட வேண்டும் என ஆணையம் கர்னாடக  மாநிலத்திற்கு உத்தரவு பிறப்பித்து உள்ளது

இதில் குடி நீருக்காக எவ்வளவு நீர் திறந்து விட வேண்டும், மற்றும் பாசனத்திற்காக எவ்வளவு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்ற விவரம் அடுத்தடுத்த கூட்டத்தில் விவாதிக்க உள்ளது

இந்நிலையில், ஆணையம் உத்தரவுக்கு, கர்னாடக மாநிலம் ஓகே சொல்லுமா..? அல்லது ஆணையத்திற்கு பணியாமல் எப்போதும் போலே எதிர்ப்பு தெரிவித்து தண்ணீர் திறந்து விடாமல் இருக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இதே போன்று, கர்னாடக மாநிலத்தில் இருந்து ஆணையத்தில் நியமிக்கப்பட்டு உள்ள முக்கிய பிரதிநிதிகள் இதற்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.

எப்படி இருந்தாலும், காவிரி மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ள இந்த உத்தரவு தமிழக மக்களிடைய பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது