கல்யாண கலாட்டாக்கள் சந்தோஷமானவைதான். ஆனால் கல்யாணத்துக்குப் பின் கிளம்பிய ஒரு கலாட்டா, களேபரமாகி, இதோ பெரும் பிரளயத்தையே கிளப்பிக் கொண்டிருக்கிறது. 

நீங்க ஷார்ப்பான ஆளுன்னா, இந்நேரம் கண்டுபிடிச்சிருப்பீங்க, இது உடுமலைப்பேட்டை கவுசல்யா - சக்தி திருமணம்தான்னு. யெஸ்! அதேதான். ஆணவ படுகொலை செய்யப்பட்ட சங்கரின் மனைவி கவுசல்யா, சக்தி எனும் பறையிசை கலைஞரை சமீபத்தில் திருமணம் செய்தார். பகுத்தறிவு தலைவர்கள் சிலர் இதை முன்னின்று நடத்தி வைத்தனர். 

இந்நிலையில், புதுமாப்பிள்ளை சக்தி ஏற்கனவே சில பெண்களை காதலித்து ஏமாற்றியவர்! எனும் பிரச்னை கிளம்பியது. அதிலும் தமிழகத்தின் முன்னணி வாரப்பத்திரிக்கை ஒன்றில் பணியாற்றும் இளம் பெண் நிருபரை அவர் காதலித்து கர்ப்பமாக்கிட, அந்த கருவை கலைக்க சொல்லி கவுசல்யா பெரும் முயற்சி செய்து சாதித்தார், இதற்காக ‘எனக்கும் சக்திக்கும் பதிவு திருமணம் நடந்துச்டுச்சு’ன்னு பொய் வேறு பரப்பி அந்த இளம் ரிப்போர்ட்டரை நம்ப வைத்தார். கருக்கலைப்பு முடிந்த பின் தங்கள் திருமணத்தை கவுசல்யா - சக்தி இருவரும் புரட்சிகரமாக (?!) நடத்திக் கொண்டனர்...என்றெல்லாம் தகவல் பரவி வருகிறது. 

இந்நிலையில் கவுசல்யா - சக்தி இருவரையும் சமீபத்தில் விசாரணைக்கு அழைத்த கொளத்தூர் மணி, தியாகு, சேலம் வளர்மதி உள்ளிட்ட சில சமூக சீர்திருத்த போராளிகள், மிக கடுமையாக அவர்களை விசாரித்ததாகவும், முடிவில் அவர்களுக்கு பகீர் தண்டனைகளை விதித்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆறு மாசம் சக்தி பொது மேடையில் பறையடிக்க கூடாது, அவரது நிமிர்வு கலையகத்திலிருந்து வெளியேற வேண்டும், மூன்று லட்சம் ரூபாய் அபராத தொகை கட்ட வேண்டும்! என்றெல்லாம் தண்டிக்கப்பட்டுள்ளனர். 

இந்த விசாரணை மற்றும் தண்டனைகளை எதிர்த்து ஒரு கூட்டம் ‘இது அத்துமீறல்! மனித உரிமை மீறல்’ என்று போர்க்கொடி தூக்கியுள்ளது. இவையெல்லாம் ஒருபுறம் இருக்க, கவுசல்யா - சக்தி இருவரும் இணைந்து சுற்றியதை இப்போது இன்னொரு டீம் போட்டு கிழிக்க துவங்கியுள்ளது. கூடவே “தியாகு, கொளத்தூர் மணி உள்ளிட்டோர் டிராமா போட்டுவ் வருகின்றனர். 

ஆக்சுவலா அந்த பொண்ணு கவுசல்யா போராளியெல்லாம் இல்லை, அந்த குணமே அவர்ட்ட கிடையாது. பல பெண்களுடன் சக்தி ஜாலியடிச்சவன்னு தெரிஞ்சேதான் போயி அவண்ட்ட விழுந்துச்சு, கல்யாணம் பண்ணுச்சு. மேரேஜ் பண்ணிக்கிறதுக்கு முன்னாடி இந்த ஜோடி சென்னைக்கு வர்றப்பவெல்லாம் தியாகுவோட வீட்டுலதான் தங்குவாங்க. மேரேஜூக்கு முன்னாடி ஒண்ணா தங்குறது என்ன புரட்சி? அப்படி தங்க வேண்டிய அவசியமென்ன? பாதிக்கப்பட்ட பத்திரிக்கையாளர் உள்ளிட்ட பெண்களுக்கு ஆதரவா இல்லாமல், கவுசல்யா - சக்திக்கு ஆதரவா நின்னு மிகப்பெரிய சீரழிவை உருவாக்கிட்டாங்க இந்த தலைவர்கள். அத்தனையும் டிராமா!” என்று பொங்கியுள்ளார். வெளங்கிடும்லே!