Kathipara bridge: டிராபிக் டென்ஷன் இனி வேண்டாம்.. மக்கள் இளைப்பாற புதிய பூங்கா.. எங்கு தெரியுமா..?

சுமார் 14 கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்ட  கத்திப்பாரா நகர்ப்புறச் சதுக்கத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவந்தார்.
 

Kathipara bridge park open by CM

சென்னை கிண்டி மேம்பாலத்தின் கீழ் சுமார் 14 கோடியே 50 லட்சம் ரூபார் செலவில் அமைக்கப்பட்டுள்ள கத்திபாரா நகர்புற சதுக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் ஒரு பகுதியாக, குளோவர் இலை வடிவமைப்புடன் கூடிய கிண்டி மேம்பாலத்தின் கீழ் பகுதியில் கைவினை பொருட்கள் அங்காடி, உணவுக்கூடம், பசுமை பகுதியுடன் கூடிய சிறுவர்களுக்கான விளையாட்டு திடல் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. மேலும் பேருந்துகள், கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்துவதற்கும் இடவசதி செய்யப்பட்டுள்ளன.மேலும் பூங்காவில் உலோகத்திலான தமிழ் உயிர் எழுத்துகளின் வடிவங்களும் இடம்பெற்றுள்ளன. இரவு நேரத்தில் மின்னொளியில் ஜொலிக்கும் வகையில் அலங்காரம் செய்யப்பட்டுள்ள இந்த நகர்புற சதுக்கத்தை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்த முதலமைச்சர், பேட்டரி காரில் பயணம் செய்து சுற்றி பார்த்தார்.

Kathipara bridge park open by CM

இதுக்குறித்து செய்திக்குறிப்பில் ,சென்னை, கத்திப்பாராவில், சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் நிதியுதவியுடன், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் சார்பில் பன்முகப் போக்குவரத்துகளை ஒருங்கிணைத்து, பொதுமக்கள் மற்றும் பயணிகள் இளைப்பாறிச் செல்லும் வகையிலும், கத்திப்பாரா மேம்பாலத்திற்குக் கீழ் உள்ள இடங்களில் 14 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கத்திப்பாரா நகர்ப்புறச் சதுக்க அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.கத்திப்பாரா சந்திப்பு சென்னை நகரின் குறிப்பிடத்தக்கபெரிய அடையாளங்களில் ஒன்றாகவும், சென்னை நகரின் நுழைவாயிலாகவும் அறியப்படுகிறது. ஆசியாவிலேயே மிகப்பெரிய குளோவர் இலை வடிவமைப்புடன் கூடிய மேம்பாலம் என்ற சிறப்பைப் பெற்றுள்ளது.மேம்பாலத்தின் கீழ் உள்ள இடங்களில் பூங்கா மற்றும் சிறார் விளையாடுமிடம் ஆகிய வசதிகளுடன் கூடிய நகர்ப்புறச் சதுக்கமாக 14 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் நிதியுதவியுடன் மேம்படுத்தத் திட்டமிடப்பட்டது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Kathipara bridge park open by CM

கத்திப்பாரா நகர்ப்புறச் சதுக்கம், அனைத்துப் பெரிய சாலைகளுடனும், வடக்கில் ஈக்காட்டுத்தாங்கல் மெட்ரோ நிலையம், தெற்கில் ஆலந்தூர் மெட்ரோ நிலையம் மற்றும் கிழக்கில் கிண்டி மெட்ரோ நிலையம் ஆகிய மெட்ரோ நிலையங்களுடனும் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த இடத்தில் மாநகரப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள், நகர்ப்புறச் சதுக்கத்தில் தற்போது யு-டர்ன் மேற்கொள்ள முடியும் சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் குறிக்கோள்களை நிறைவேற்றுவதில் ஒரு பகுதியாக கத்திப்பாரா நகர்ப்புறச் சதுக்கம் மேம்படுத்தப்பட்டுள்ளது.

Kathipara bridge park open by CM

எந்த நேரமும் சுறுசுறுப்புடன் இயங்கும் சந்திப்பின் இடையே இளைப்பாறும் பகுதியாக அமைந்துள்ளதுடன் நகரத்தின் இதுமாதிரியான இடங்களில் இதுவே முதலாவதாகும்.நகர்ப்புறச் சதுக்கத்தின் வடிவமைப்பு நவீன சென்னையின் அடையாளத்தையும், கலாச்சாரப் பெருமையையும் பிரதிபலிக்கிறது. மேலும், கைவினைப் பொருள் அங்காடி, உணவுக்கூடம், பசுமைப் பகுதியுடன் கூடிய சிறார் விளையாடுமிடம் ஆகியவையும், 1
குளோவர் இலை வடிவமைப்புப் மேம்பாலத்தின் கீழ் அமைந்துள்ளதால், இந்த இடம் இயற்கையாகவே 4 பகுதிகளாகப் பிரித்து மேம்படுத்தப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios