திருச்சி

திருச்சியில் சாதிமறுப்புக் காதலர்களுக்குத் திருவிழா கொண்டாட்டத்திற்கு அனைத்து காதலருக்கும் அழைப்பு விடுத்துள்ளது தமிழக மக்கள் பண்பாட்டுக் கழகம்.

அவர்களது அழைப்பு பினவருமாறு:

“திருச்சியில் 12-02-2017 அன்று காதலர் தினக் கொண்டாட்டம்! திருச்சி நோக்கி வாரீர்!

நண்பர்களே! தோழர்களே! கருத்தொருமித்த காதலர்களே! சாதி ஒழிப்புப் போராளிகளே!

மனிதன் மனிதனாக வாழ்வதற்கு, தமிழராக ஒன்றிணைவதற்கு, உழைக்கும் மக்களாக இணைந்து போராடுவதற்கு பிற்போக்குச் சமூகக் கட்டமைப்பான சாதியப் பிளவுகளும், மதவாத அரசியலும் பெருந்தடையாக உள்ளது உங்களுக்கே தெரிந்த செய்திதான்.

சாதி மறுப்புத் திருமணக் குடும்பத்தினர், தங்களது பிள்ளைகளுக்குத் திருமணம் செய்ய சாதிமறுப்பு இணையைத் தேடிக் களைத்து, சாதிக்குள்ளேயே அடைக்கலம் தேடுவது வேதனைக்குரியது.

சாதிமறுத்துத் திருமணம் செயதவர்களுக்குள் ஒரு சாதி ஆதிக்கம் செய்யாமல் தவிர்க்க, சாதிமறுப்பு இணையைத் தேர்வு செய்ய, புதிய உறவுகளைச் சந்திக்க, சட்ட உதவி பெற தமிழ்நாடு கலப்புத் திருமணக் குடும்பங்கள் நலக் கூட்டியக்கம் திருச்சியில் 12-2-2016 காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை உலக காதலர் தினத்தையொட்டி சந்திப்பு - திருவிழா ஏற்பாடு செய்துள்ளோம்.

மதுரை, ஆணையூர் தங்கப்பாண்டி குழுவினரின் வரவேற்பு நிகழ்ச்சிகள்,

கரூர் தாய்த் தமிழ்ப் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், கருத்துரை, கலந்துரையாடல் நடைபெறும்.

காதலர்கள், காதல், சாதி மறுப்புத் திருமணக் குடும்பங்கள், சாதி ஒழிப்புக் கருத்தாளர்கள், செயல்பாட்டாளர்கள் திருச்சி வாருங்கள்! சங்கமிப்போம்!

தோழமையுடன்

மீ.த.பாண்டியன், தலைவர்,

தமிழக மக்கள் பண்பாட்டுக் கழகம்

தமிழ்நாடு கலப்புத் திருமணக் குடும்பங்கள் நலக் கூட்டியக்கம்

பேச:9443184051

என்ற புதுவித அழைப்பு விடுத்துள்ளது தமிழக மக்கள் பண்பாட்டுக் கழகம்.