தி.மு.க தலைவர் கருணாநிதி வாழ்த்து

சென்னை அப்போல்லோவில் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்றுவரும் முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் குணமடைய தி.மு.க.தலைவர் கருணாநிதி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

உடல்நல குறைவு காரணமாக சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு இன்று மாலை 4 மணி அளவில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அவருக்கு இதய மற்றும் சுவாசவியல் நிபுணர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்த செய்தி அறிந்ததும், அப்பல்லோ மருத்துவமனையில் ஆயிரக்கணகான தொண்டர்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றனர். இவர்களைக் கட்டுப்படுத்த நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் தேறி குணமடைய தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில், “ முதல்வர் ஜெயலலிதா பூரண நலம் பெற விழைகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.