திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை எப்படி சீரானது என்பது தெரியாமல் மருத்துவர்கள் வியந்து போனார்கள். இத்தனை வயதிலும் அவரது போராட்ட குணம் மருத்துவர்களை ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. மிகவும் மோசமான நாடித்துடிப்பில் இருந்து கருணாநிதி மீண்டு வந்தது மருத்துவர்களையே திகைக்க வைக்க செய்துள்ளது.

 

காவேரி மருத்துவமனையில் திமுக தலைவர் கருணாநிதிக்கு 3-வது நாளாக தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தீவிர சிகிச்சைகளுக்கு பின் கருணாநிதியின் உடல்நிலை முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவக்குழுவினர் தெரிவித்துள்ளனர். கடந்த 4 நாட்களில் கருணாநிதியின் உடல்நிலை 3 முறை மோசமானது. இதில் 27ம் தேதி உடலில் மிகவும் அதிகமான பாதிப்பு ஏற்பட்டது. பிறகு 29-ம் தேதியான நேற்று  மிகவும் அதிக அளவில் உடலில் பிரச்சனை ஏற்பட்டது. இதனால் மருத்தவமனை வளாகவே பதற்றத்துடன் காணப்பட்டது. 

கருணாநிதி உடல்நிலை குறித்து காவேரி மருத்துவமனையில் அறிக்கை வெளியிட்டது. அதில் 3 விதமான பிரச்சனைகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலில் காய்ச்சல், அதன்பின் சிறுநீரக நோய் தொற்று, கடைசியாக இரத்த அழுத்தம் ஏற்பட்டது. இந்த 3 பிரச்சனையும் மாறி மாறி வந்ததால் அவரது உடல்நிலை மோசமானது. தற்போது ரத்த அழுத்தம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் சிறுநீரக தொற்று இன்னும் குணமாகவில்லை.

இந்த 94 வயதில் இப்படி குறைபாடுகளை வைத்துக்கொண்டு வாழ்வதே ஆச்சர்யமான விஷயம் என்று மருத்துவர்கள் வியப்புடன் தெரிவித்துள்ளனர். சிறுநீரக தொற்று ஏற்பட்டு இருக்கும் போது இவ்வளவு வயதில் உயிரோடு இருப்பதே கஷ்டம் என்று மருத்துவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 74ல் இருந்த நாடித்துடிப்பு நேற்று திடீரென 35ல் வந்தது. இதனால் தான் நேற்று இரவு பரபரப்பு ஏற்பட்டது. மீண்டும் நாடித்துடிப்பு மீண்டும் 70-ஐ எட்டியது. இது எல்லாம் வியப்புக்குரிய விஷயமாகவே கருதப்படுகிறது என மருத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.