Karunanidhi name should be added
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலை கல்வெட்டில் இருந்து நீக்கப்பட்ட கருணாநிதியின் பெயரை மீண்டும் சேர்க்க வேண்டும் என்று தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழுவில் தீர்மானம் போடப்பட்டுள்ளது.
சென்னையில் 64-வது தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் நடிகர் சங்க தலைவர் நாசர், செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, சங்க உறுப்பினர்கள், முன்னணி நடிகர் - நடிகைகள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில், நடிகர் சங்கத்தின் 2016-17 ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கை மற்றும் தணிக்கை செய்யப்பட்ட வரவு செலவு கணக்குகள்
வாசிக்கப்பட்டது.
கூட்டத்தன்போது பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கேளிக்கை வரியை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்; சிவாஜி மணி மண்டபத்தில்
உள்ள சிவாஜி சிலையில் இருந்து நீக்கப்பட்ட கருணாநிதியின் பெயரை மீண்டும் சேர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள்
நிறைவேற்றப்பட்டன.
சின்னத்திரை உறுப்பினர்களை நடிகர் சங்கத்தில் சேர்க்க பொதுக்குழுவில் பேசி முடிவெடுக்கப்படும் என்றும், நட்சத்திர கிரிக்கெட் வருமான
விவரங்களை நடிசர் சங்க இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
கூட்டத்தில் நடிகர் விஷால் பேசும்போது நடிகர் சங்க கட்டுமானப் பணியை யாராலும் தடுக்க முடியாது என்றும் வழக்கு தொடருவோர் தொடரலாம் என்று கூறினார். அரசின் கேளிக்கை வரி பெரும் சுமையாக உள்ளது என்றும் வரியை ரத்து செய்தால்தான் தமிழ் சினிமா செயல்பட முடியும் என்றும் விஷால் கூறினார்.
