KARUNANIDHI KISSED KANIMOZHI AND CONVEYED REGARDS TO BOTH

கன்னத்தில் முத்தமிட்டகருணாநிதி...கண்ணீரில் மூழ்கிய கனிமொழி....

2G அலைக்கற்றை வழக்கில், கனிமொழி, ஆ.ராசா இருவரும் விடுதலையான பிறகு இன்று விமான நிலையம் வந்தடைந்தனர்.

இவர்கள் இருவரையும் வரவேற்க, திமுக செயல் தலைவர் முக ஸ்டாலின் விமான நிலையம் சென்றார். அப்போது கனிமொழியை பாசத்துடன் கட்டி தழுவி, அன்பை வெளிப்படுத்தி வெற்றியை கொண்டாடினர்.

விமான நிலையம் முதல் கோபாலபுரம் வரை கோலாகலம் பூண்டது என்றே சொல்லலாம் ....

கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதி

கனிமொழி மற்றும் ராசா இருவரும் கோபாலபுரம் சென்றவுடனே, கருணாநிதியை சந்தித்த கனிமொழி தன் அப்பாவுக்கு முத்தமிட்டு வெற்றியை கொண்டாடினர்

அதைவிட, மகள் கனிமொழி கன்னத்தில்,கருணாநிதி முத்தமிட்டு, வெற்றி வாகை சூடிய கனிமொழிக்கு தைரியத்தை அளித்தார்

இதனை தொடர்ந்து வருங்காலம் வசந்த காலமாக மாறும் என்ற எண்ணம் மேலோங்கியுள்ளது ...

மேலும், தயாளு அம்மாள், ராசாத்தி அம்மாள் இருவரும் மகளை கட்டி அனைத்து வாழ்த்தினையும் அன்பையும் பகிர்ந்து கொண்டனர்
கோபாலபுரம் தற்போது, விழாக்கோலம் பூண்டுள்ளது என்றே கூறலாம்...

தொண்டர்கள் அனைவருக்கும் இன்று கோபாலபுரத்தில் மதிய உணவுக்கும் ஏற்பாடு செய்யப் பட்டு உள்ளது.க.அன்பழகன் மற்றும் முக்கிய திமுக பிரமுகர்கள் அனைவரும் உடனிருந்தனர்......

மொத்தத்தில் திமுக தற்போது வெற்றி கொண்டாட்டத்தில் உள்ளது.