திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில் இதற்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் புகைப்படம் வெளியிடப்பட்டது. இந்நிலையில் தற்போது காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. கருணாநிதியின் உடல்நிலை படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறார். திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை குறித்து காவேரி மருத்தவமனை அறிக்கையில் தெரிவித்துள்ளது.

 மருத்துவமனையில் கருணாநிதி மேலும் சில நாட்கள் சிகிச்சை பெற வேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ சிகிச்சைக்கு கருணாநிதி உடல்நிலை ஈடுகொடுத்து வருகிறது என அதில் கூறப்பட்டுள்ளது. முன்னதாக காவேரி மருத்துவமனைக்கு வந்த ராகுல் காந்தி கருணாநிதி நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்தார். அப்போது அவர் சந்தித்த புகைப்படம் காட்சி வெளியானது. இதனால் தொண்டர்கள் 

இதன் காரணமாக காவேரி மருத்துவமனைக்கு எதிராக திரண்டிருந்த தொண்டர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். எழுந்து வா தலைவா..காவேரியை வென்று..வா...என்ற வீர வசன முழக்கம் எழுப்பி வருகின்றனர். இந்த புகைப்படத்தை பார்க்கும் போது கலைஞருக்கு உயிர் காக்கும் கருவி எதுவும் பொருத்தப்படாமல் உள்ளது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் கருணாநிதியின் உடல்நிலை படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது. மேலும் கல்லீரல் செயல்பாடு, ரத்த ஓட்டம் ஆகியவை சீராக்கப்பட்டுள்ளது என காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.