Karnataka open Cauvery water for Tamilnadu as Kabini dam

கபினி அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 30,000 கன அடியாக இருக்கிறது. இதனால் கபினி அணையில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 15,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. கபினி அணையிலிருந்து காவிரி நீர் தமிழகத்தை 2 நாட்களில் வந்தடையும். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

கடந்த சில நாட்களாக கபிணி அணை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் கனமழை பெய்து வருவதால் கபிணி அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கபிணி அணை நிறையும் நிலையில் உள்ளது. இந்த நிலையில் இன்று கபிணி அணையில் இருந்து தண்ணிரை திறந்துவிட கர்நாடக அரசு உத்தரவிட்டதை தொடர்ந்து வினாடிக்கு 15000 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

காவிரி மேலாண்மை ஆணையத்திற்கான உறுப்பினர்களை நியமனம் செய்யாமல் தாமதம் செய்து வரும் கர்நாடகா, சுப்ரீம் கோர்ட்டின் இடைக்கால உத்தரவை கூட மதிக்காமல் காவிரியில் இருந்து தண்ணீரை திறந்துவிட மறுத்தது. இதனால் குறுவை சாகுபடிக்கு ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணிர் திறந்துவிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், தென்மேற்கு பருவமழை தொடங்கி தற்போது தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் கர்நாடகத்தில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை கொட்டியுள்ளது. இந்த மழையால் கபினி உள்ளிட்ட பெரும்பாலான அணைகள் நிரம்பிவிட்டன. கபினி அணைக்கு வினாடிக்கு 30,000 கனடி நீர் வந்து கொண்டிருப்பதால் 15,000 கன அடிநீரை தமிழகத்துக்கு திடீரென திறந்துவிட்டுள்ளது கர்நாடகா.