Cauvery: காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு முழு ஒத்துழைப்பு; அணை கட்ட அனுமதியுங்கள் - டி.கே.சிவக்குமார்
காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ள கர்நாடகா துணைமுதல்வர் டி.கே.சிவக்குமார், மேகதாதுவில் அணைகட்ட தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
காவிரியில் தொடர்ந்து தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகா அரசின் நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தமிழகத்தில் இன்று ஆளும் கட்சி சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு மற்றும் உசச்நீதிமன்ற ஆணையின்படி, தமிழ்நாட்டிற்குக் காவிரி நீரை உடனடியாக விடுவித்திட கர்நாடக அரசுக்கு ஆணையிடுமாறு காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்திற்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது தொடர்பாக கர்நாடகா துணைமுதல்வர் டி.கே.சிவக்குமார் கூறுகையில், தமிழகத்தை போன்றேன கர்நாடகாவிற்கும் தண்ணீர் தேவை உள்ளது. தமிழகத்திற்கான தண்ணீர் தேவையை நாங்கள் நிராகரிக்கவில்லை. தமிழகத்திற்கு ஒரேயொரு கோரிக்கையை முன்வைக்கிறோம். இருமாநில தேவையை ஒப்பிட்டு பார்க்கையில் தமிழகத்தின் நீர் தேவைக்கே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
உள்துறை செயலாளர் அமுதா உள்பட தமிழகத்தில் 15 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம்
அணைகளில் நீர் வரத்து மற்றும் கொள்ளவுக்கு ஏற்பவே காவிரியில் தண்ணீர் திறந்துவிட முடியும். தமிழகத்திற்கு அனைத்து விதத்திலும் ஒத்துழைப்பு வழங்க தயாராக இருக்கிறோம். தமிழ்நாட்டில் அனைத்து கட்சி கூட்டம் நடத்துவதில் எங்களுக்கு எந்த வித ஆட்சேபனையும் இல்லை. எங்களுடைய ஒரே வேண்டுகோள் மேகதாதுவில் அணை கட்ட தமிழக அரசு அனுமதியளிக்க வேண்டும்.
இது என்ன தமிழ்நாடா? இல்லை உத்திரபிரதேசமா? நிர்வாகியின் படுகொலையால் சீமான் உச்சக்கட்ட ஆவேசம்
கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டிற்கு மேகதாது அணை சமமாக பலனளிக்கும். இரு மாநிலங்களின் செழிப்புக்கு அணைக்கட்டும் நடவடிக்கை மிக அவசியம். அனைத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டு, மேகதாதுவின் கட்டுமானத்திற்கு தமிழ்நாடு அரசு பச்சைக்கொடி காட்டும் என நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.