மூச்சுத்திணறல் மற்றும் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காஞ்சி ஜெயேந்திரர் சிகிச்சை பலனின்றி திடீரென காலமானார். 

காஞ்சி ஜெயேந்திரர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட திடீர் மூச்சுத் திணறல் காரணமாக சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இதையடுத்து அவர் காஞ்சி மடத்தில் ஓய்வெடுத்து வந்தார்.

இந்நிலையில் இன்று காலை  அவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக காஞ்சிபுரம் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக  அனுமதிக்கப்பட்டார். 

அவருக்கு லேசான மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும், உடனடியாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகின. 

தேவைப்பட்டால் வேறு மருத்துமனைக்கு அவர் மாற்றப்படுவார் என்றும் காஞ்சி மட தகவல்கள் வெளியாகின. 

இதனால் சங்கராச்சாரியார் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து அங்கு எராளமான பக்தர்கள் குவிந்தனர்.

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காஞ்சி ஜெயேந்திரர் உயிரிழந்தார்.