தேசிய கட்சியான காங்கிரசில் மிக முக்கிய பங்கு வகித்தவர் காமராசர். மாநில அளவிலும் தேசிய அளவிலும் மிகவும் புகழ் பெற்றவர்.

எப்போதும் ஏழைகளை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக தொலைநோக்கு பார்வை கொண்டு பல முக்கிய திட்டங்களை அமல்படுத்திய பெருமை காமராசரை சேரும். இவருடைய தொலை நோக்கு பார்வையுடன் செயல்படுத்தப்பட்ட பல திட்டங்கள் இன்று மட்டுமல்ல என்றும் நிலைத்து இருப்பதால் தான் அவரை கர்ம வீரர் காமராசர்  என்கிறோம்.

காமராசரை பற்றி பல விவரங்கள் நமக்கு தெரிந்து இருந்தாலும், அவருடைய பல்வேறு திட்டங்கள் பற்றி நாம் தெரிந்து இருந்தாலும், அவர் பயன்படுத்திய கார் பற்றி நிறைய பேருக்கு தெரியாது என்றே கூறலாம்.

அதில் குறிப்பாக, காமராசர் முதல்வராக பதவி ஏற்ற பின்பு, அலுவலக பணிக்காக, டிவிஎஸ் சுந்தரம், கருப்பு நிற பிளைமவுத் காரை அவருக்கு பரிசாக வழங்கினார். இவர் பயன்படுத்திய வாகனத்தின் பதிவு எண் MDT 2727 என்பது குறிப்பிடத்தக்கது.

மக்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்த சரித்திர நாயகனாக காமராசர் பயன்படுத்திய இந்த கார் சென்னை காமராஜர் அரங்கில் வைக்கப்பட்டு உள்ளது. பொதுமக்களின் பார்வைக்காக காமராஜர் அரங்கிலேயே வைக்கப்பட்டு உள்ளது. இந்த காரை மக்கள் ஆர்வமாக பார்த்து, காரின் அருகில் நின்று செல்பி எடுத்துக்கொள்கின்றனர்.