சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி முகாமின் நிறைவு விழா நடைபெற்றபோது, அதில் சிறப்பு விருந்தினராக நடிகர் கமலஹாசன் கலந்து கொண்டார்.

இந்தியாவில் பெண் ராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சி, பரங்கிமலை ராணுவ மையத்தில் தான் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. இந்த முகாமில் 25 வெளிநாட்டவர் உள்பட ராணுவ அதிகாரிகள் பலர் பயிற்சி பெற்றுச் செல்கின்றனர். பெண் ராணுவ அதிகாரிகளுக்கான வழியனுப்பும் மற்றும் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. 

ஆரவாரமாக நடந்த இந்தப் பயிற்சி முகாம் நிறைவு நிகழ்ச்சியில் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் கமலஹாசன் கலந்து கொண்டு ராணுவ அதிகாரிகள் செய்த சாக நிகழ்ச்சிகளைக் கண்டு களித்தார்.