kamal tweets about nover7
நடிகர் கமல் அரசியலுக்கு வருவாரா வருவாரா என தொடர்ந்து பேசிவந்த ஒரு கருத்துக்கு,கமல் தற்போது ஒரு கருத்தை தெரிவித்து அதற்கு ஒரு முற்றுபுள்ளி வைத்துள்ளார்.
நவம்பர் 7 ம் தேதி முக்கிய அறிவிப்பு வெளியிட உள்ளேன். நம் இயக்கத்தார் என்னுடனும், மக்களுடனும் தொடர்பு கொள்ள வசதியாக ஏற்பாடுகள் நடக்கின்றன. தமிழகத்திற்கு கடமையாற்ற நினைப்பவர்களை இருகரம் கூப்பி வரவேற்கிறேன். தியாகமாக நினைத்து முன்வருபவர்கள் ஒதுங்கிக் கொள்ளுங்கள். அவர்கள் என்னை கடன்பட செய்வார்கள்
இளைஞர்களை ஒருங்கிணைக்க வேண்டிய கடமையும் தேவையும் எனக்கு வந்து விட்டது. நமது இயக்கத்துடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளோருடன் சேர்ந்து தமிழகத்துக்கு பலம் சேர்ப்போம்- இப்படியெல்லாம் சொல்லி வந்த கமல் தற்போது தன் ட்விட்டர் பக்கத்தில் ஒரு முக்கிய தகவலை வெளியிட்டு ரசிகர்களை அப்செட் செய்துள்ளார்
அதில்,
ஊடக உந்தல் கருதி கட்சியை அறிவிக்க முடியாது. நவம்பர்.7 இயக்கத்தார் கூடுவது எம் பலவருட வழக்கம்.பொது அறிவுப்புகள் மக்கள் மன்றத்திலேயே நடக்கும் என தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் பதிவு
ஊடக உந்தல் கருதி கட்சியை அறிவிக்க முடியாது. நவம்பர்.7 இயக்கத்தார் கூடுவது எம் பலவருட வழக்கம்.பொது அறிவுப்புகள் மக்கள் மன்றத்திலேயே நடக்கும்
— Kamal Haasan (@ikamalhaasan) October 26, 2017
ஆக மொத்தத்தில் கமல் தாற்போது ட்விட்டர் மூலம் தான் தன் அரசியல் கருத்தை வழக்கமாக தெரிவித்து வருவார் என்பது போன்ற தோற்றம் உருவாகி உள்ளது
