Asianet News TamilAsianet News Tamil

பொங்கல் பரிசாக பைக் கொடுத்து அசத்திய ஜவுளிக்கடை உரிமையாளர்! ஊழியர்கள் உற்சாகம்!

எதிர்பாராத பொங்கல் பரிசைப் பெற்ற ஊழியர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் உரிமையாளர் ரமேஷுக்கு மிகுந்த மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளனர்.

Kallakurichi textile owner gave new bikes to employees as pongal gifts sgb
Author
First Published Jan 17, 2024, 8:43 PM IST

கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த பிரபல ஜவுளிக்கடை உரிமையாளர் 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் ஊழியர்களுக்கு பொங்கல் பரிசாக புத்தம் புதிய பைக் ஒன்றைப் பரிசாக அளித்து அசத்தி இருக்கிறார். இந்தப் பரிசைப் பெற்ற ஊழியர்கள் மகிழ்ச்சியில் வாயடைத்துப் போயிருக்கிறார்கள்.

கள்ளக்குறிச்சியில் உள்ள பிரபல ஜவுளிக்கடை JKR டெக்ஸ்டைல்ஸ். இந்தக் கடையில் 20க்கும் அதிகமான ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். கடையில் வேலைக்குச் சேரும் நபர்களில் பலர் ஓரிரு வருடத்தில் வேலையை விட்டுச் சென்றுவிடுவது வாடிக்கையாக இருந்துள்ளது. இதனால் கடையை சுமுகமாக நடத்துவதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.

இச்சூழலில் அந்தக் கடையின் உரிமையாளர் ரமேஷ் பணியாளர்களைக் கவர ஆச்சரியமூட்டும் திட்டம் ஒன்றைத் தீட்டியிருக்கிறார். 10 வருடத்திற்கு மேல் வேலை பார்த்துவரும் சில ஊழியர்களைப் பாராட்ட நினைத்த அவர் நினைத்தார். அதற்காக, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நீண்டகாலமாக வேலையில் இருக்கும் சில ஊழியர்களுக்கு புதிய பைக்கை பரிசாக வழங்கி இருக்கிறார்.

Kallakurichi textile owner gave new bikes to employees as pongal gifts sgb

ஊழியர்களின் குடும்பத்தினரையும் அழைத்துவந்து புதிய பைக்கை அவர்களுக்கு வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் ரமேஷ். இந்தச் செயல் மூலம் அந்த ஊழியர்கள் பெருமகிழ்ச்சி அடைந்திருப்பது மட்டுமின்றி, கடைக்கு வந்த வாடிக்கையாளர்களும் JKR டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளரை பாராட்டிச் சென்றுள்ளனர்.

ஜே.கே.ஆர். டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர் ரமேஷின் இந்தச் செயல் மூலம் பொதுமக்கள் மத்தியிலும் அவரது கடைக்கு நல்ல மதிப்பு ஏற்பட்டுள்ளது. பணியில் இருக்கும ஊழியர்களும் உற்சாகத்துடன் தொடர்ந்து வேலையில் நீட்டிப்பார்கள் என்று உரிமையாளர் ரமேஷ் நம்பிக்கை தெரிவிக்கிறார்.

எதிர்பாராத பொங்கல் பரிசைப் பெற்ற ஊழியர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் உரிமையாளர் ரமேஷுக்கு மிகுந்த மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளனர். நேர்மையாக வேலை செய்த தங்கள் உழைப்புக்கு சிறப்பான மதிப்பு கிடைத்திருக்கிறது என்று அவர்கள் பூரிப்படைந்துள்ளனர்.

விரைவில் கூகுள் பே மூலம் உலகம் முழுவதும் UPI பேமெண்ட் வசதி! புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து!

Follow Us:
Download App:
  • android
  • ios