கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள்... வீடியோவைப் பார்த்து தமிழக அரசைக் கண்டித்த நீதிபதி புகழேந்தி!
நீதிபதி புகழேந்தி, தமிழகத்தில் சட்டவிரோத மதுவிற்பனையை அரசு எப்படி அனுமதிக்கிறது என்றும் சட்டவிரோதமாக மது விற்பனை செய்தவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் கேள்வி எழுப்பினார்.
தமிழகத்தில் சட்டவிரோத மதுவிற்பனையை அரசு எப்படி அனுமதிக்கிறது என்று கேள்வி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி புகழேந்தி எழுப்பியிருக்கிறார். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் தொடர்பான வழக்கின் விசாரணையின்போது நீதிபதி இவ்வாறு பேசியிருக்கிறார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் கிராமத்தில் கள்ளச்சாராயம் குடித்து 39 பேர் உயிரிழந்துள்ளனர். இன்னும் பலர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதனால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இந்நிலையில், இந்தச் சம்பவம் குறித்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, கள்ளக்குறிச்சி சம்பவம் போல இன்னொரு சம்பவம் நடக்காமல் இருக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
நாளைக்கே 1000 டாஸ்மாக் கடைகளை மூடணும்... முத்துசாமி ராஜினாமா செய்யணும்: அண்ணாமலை வலியுறுத்தல்
வழக்கை விசாரித்த நீதிபதி புகழேந்தி, தமிழகத்தில் சட்டவிரோத மதுவிற்பனையை அரசு எப்படி அனுமதிக்கிறது என்றும் சட்டவிரோதமாக மது விற்பனை செய்தவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் கேள்வி எழுப்பினார். காவல்துறை அலட்சியத்தால்தான் பலர் உயிரிழந்துள்ளனர் எனவும் இதற்குத் துணைபோன காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.
சட்டவிரோத மது விற்பனை குறித்து வீடியோ ஆதாரத்துடன் பொதுமக்கள் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
பாஜக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் சமூக ஆர்வலர்களும் தமிழக அரசின் அலட்சியப் போக்கால் பல உயிர்கள் பலியாகியுள்ளன எனக் கண்டனம் தெரிவிதுள்ளன. தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று கேட்டிருக்கிறார். உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் நிவாரணத் தொகை பாஜக சார்பில் வழங்கப்படும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.25 லட்சம் நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்று சொல்கிறார். இந்நிலையில், இன்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழக அரசு சார்பில் ரூ.10 லட்சம் நிவாரணத் தொகைக்கான காசோலைகளை வழங்கினார்.
மைக்ரோசாஃப்ட், கூகுள் குரோம் பயனர்களைக் குறிவைக்கும் புதிய மால்வேர் தாக்குதல்!