உதவியாளரை ஷூ தூக்க வைத்த கள்ளக்குறிச்சி கலெக்டர்! வைரல் வீடியோவால் குவியும் கண்டனங்கள்
கூவாகம் கூத்தாண்டவர் கோயிலுக்குச் சென்ற கள்ளக்குறிச்சி கலெக்டர் ஷர்வன் குமார் ஜாவத் உதவியாளரை அழைத்து தன் ஷூவைத் தூக்கிச் செல்லுமாறு கூறினார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷர்வன் குமார் ஜடாவத் உதவியாளரை தன் ஷூவைத் தூக்கிச் செல்லச் சொன்ன வீடியோ வைரலாகப் பரவியதால், அவருக்கு எதிராக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அருகே கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா நடைபெறுகிறது. உலகப் புகழ்பெற்ற இந்தத் கூவாகம் சித்திரைத் திருவிழா வரும் ஏப்ரல் 18ஆம் தேதி சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் ஆரம்பிக்கிறது. திருநங்கைகள் தாலி கட்டிக்கொள்ளும் நிகழ்ச்சி மே 2ஆம் தேதியும், மறுநாள் மே 3ஆம் தேதி தேரோட்டமும் நடைபெறுகிறது.
புதுக்கோட்டையில் போட்டி போட்டு மீன்களை அள்ளிய கிராம மக்கள்
இந்நிலையில் சித்திரைத் திருவிழாவுக்கான ஏற்பாடுகளைப் பார்வையிடுவதற்காக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷர்வன் குமார் ஜடாவத் நேற்று (செவ்வாய்க்கிழமை) கோயிலுக்குச் சென்றிருந்தார். அங்கு ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் ஷர்வன் குமார் கோயிலுக்கு உள்ளே தரிசனம் செய்யச் செல்வதற்கு முன் தனது ஷூவைக் கழற்றிவிட்டு, தன் உதவியாளரை அழைத்தார். பின், உதவியாளரிடம் தான் கழற்றிப் போட்ட ஷூவை எடுத்துச் செல்லுமாறு கூறினார். அதன்படி உதவியாளரும் ஷூவை எடுத்துச் சென்றார்.
இந்த சம்பவத்தை அங்கிருந்த ஒருவர் வீடியோ பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். அந்த வீடியோ வேகமாகப் பரவியதில் பல தரப்பில் இருந்தும் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷர்வன் குமாருக்கு கடும் கண்டனங்கள் வந்த வண்ணம் உள்ளன.
ஆன்லைன் சூதாட்ட தடை தாக்குபிடிக்குமா? நீதிமன்றத்தை நோக்கி அம்புகளை ஏவும் ஆன்லைன் கேம் நிறுவனங்கள்