இன்னும் 3 மாதங்களில் தமிழகத்தில்..? காளிமாதா பரபரப்பு வாக்கு
உலக மக்கள் அனைவரும் நலமாக இருக்க வேண்டும் என்பதே எனது பிரார்த்தனை என பெண் சாமியார் பவித்ரா காளிமாதா கூறி உள்ளார். மேலும் தமிழகத்தில் இன்னும் 3 மாதங்களில் பெரிய பிரெளயம் வருபோவதாக வாக்கு கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை கிராமத்தை சேர்ந்தவர் பவித்ரா காளிமாதா. இவர் காளிமாதா அகில இந்திய யுவ மோட்சா தர்மசார்யா பட்டம் பெற்றவர் என்று சொல்லப்படுகிறது. சுடிதார், முக அலங்காரம், சிகை அலங்காரம், முடிகளில் கலரிங், கழுத்து நிறைய நகைகள், என்று வித்தியாசமான கெட் அப்பில் திரியும் இவர், தன்னை காளி மாதா என்று அழைக்கிறார். அவ்வப்போது கோவில் கோவிலாக வரும் இவர், சொல்லும் வாக்குகள் பரபரப்பை ஏற்படுத்துவது கூட உண்டு. மேலும் எம்.ஜி.ஆர் தான் இவருக்கு பவித்ரானு பெயர் வைத்தார் எனவும் வீட்டுக்கு பக்கத்திலேயே காளி கோயில் என்பதால் காளி மீதான பக்தி அதிகமாகி, பின்னாளில் பவித்ரா காளிமாதா என்று தன் பெயரை மாற்றிக்கொண்டதாகவும் கூறிகிறார். மேலும் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அவர்களை பார்க்கப் போனதாகவும் பவித்ராவை பார்த்து தங்கத் தாரகைனு அழைத்ததாகவும் சொல்லி வருகிறார்.
இதோடு நிற்காமல், என்னிடம் ஆசியும் ஒரு ரூபாய் காசும் வாங்கியதால் தான் அப்போது ஓ.பி.எஸ். முதல்வர் ஆனார் என்று கூறி தமிழக அரசியலையே தெறிக்கவிட்டவர் இந்த காளிமாதா. மேலும்ஒரு சம்பவமாக, எடப்பாடி தன்னை வரவேற்கவில்லை என்பதால் தான், கடந்த தேர்தலில் ஆட்சியை இழந்தார் என்றுகூறி எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றி விட்டார். மேலும் கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா தொடங்கி திண்டுக்கல் சீனிவாசன் வரை என்னுடைய பக்தர்களாக உள்ளனர் என்று கூறி வருகிறார்.
இந்நிலையில் இவர் திருவண்ணாமலை மகா தீபத்தை தரிசனம் செய்வதற்காக திருவண்ணாமலைக்கு இன்று வந்தார். வழக்கம் போல் முகத்தில் புல் மேக்கப், உதட்டில் டார்க் லிப்ஸ்டிக் , ஹர் கலரிங், நிறைய தங்க நகைகளை அணிந்து இருந்தார். சொகுசு காரில் வந்திறக்கிய இவர், காளி கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு கிரிவலம் சென்றார். முன்னதாக அவர் கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு குங்கும திலகமிட்டு ஆசி வழங்கினார். அவர் கூறும்போது, சிறுவயதில் காளிமாதா மீது எனக்கு பக்தி ஏற்பட்டது. அதுமுதல் காளிமாதா வழிபாட்டில் ஈடுபட்டு வருகிறேன். இரவில் மயானம் சென்றும் வழிபாடு செய்வேன்.
உலகில் அதர்மம் தலைதூக்கும்போது சிவன், காளியை அவதாரம் எடுக்க செய்வார். உண்ணாமலை அம்மன் போல் காளியும் சிவனுக்கு மிகவும் விருப்பமானவள். அண்ணாமலையார் உத்தரவின்பேரில் திருவண்ணாமலைக்கு வருகை தந்து கிரிவலம் சென்று வந்துள்ளேன் என கூறினார். உலக மக்கள் அனைவரும் நலமாக இருக்க வேண்டும் என்பதே எனது பிரார்த்தனை. தமிழகத்தில் 3 மாதத்திற்கு பிறகு பயங்கர பிரளயம் ஏற்படும். பின்னர் அமைதியான சூழ்நிலை உருவாகும் வழக்கம்போல் ஒரு குண்டை போட்டு விட்டு கிளம்பினார்.