உடல் நலம் தேறியபின்  கலைஞர் தான் முதலமைச்சர் ...! தென்மண்டல ஜோசியர் பகீர் 

காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதி  உடல் நலம் தேறியபின் முதல்வர் ஆவார் என தென்மண்டல பிரபல ஜோசியர் ஒருவர்  தெரிவித்து உள்ளார்

கலைஞரின் உடல் நிலையில் சற்று பின்னடைவு ஏற்பட்டு உள்ளது என வெளியான தகவலை அடுத்து காவேரி மருத்துவமனை மற்றும் கோபாலபுரம் இல்லம் முன்பாக ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கூடி உள்ளனர்

இந்நிலையில், கலைஞரின் உடல் நலம் பெற வேண்டும் என்பதற்காக, காவேரி மருத்துவமனை முன்பு தொண்டர்கள் பிரார்த்தனை செய்தும், பூசணிக்காய் உடைத்தும்  வந்தனர்

இது ஒருபக்கம் இருக்க மற்றொரு பக்கம், வேலூரை சேர்ந்த தொண்டர் ஒருவர்  கலைஞர் உடல் நலம் பெற வேண்டும் என்பதற்காக, மொட்டை அடித்துக் கொண்டு உள்ளார்

எழுந்து வா தலைவா .. காவேரியை வென்று வா தலைவா என்ற வாசகத்துடன்  தொண்டர்கள் கோஷமிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தென்மண்டலத்தை சேர்ந்த பிரபல ஜோதிடர் ஒருவர், கலைஞர் உடல்நலம் தேறியபின், தமிழகத்தின் அடுத்த  முதல்வர் கருணாநிதி தான்  என கூறி உள்ளார்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ,கலைஞர் தன்னுடைய அரசியல் வாழ்கையில் துரோகிகளிடமும் எதிரிகளிடமும் போராடி வந்தார்

இப்போது எமனிடம் போராடி வருகிறார்...இதனையும் வென்று மீண்டு வருவார்  கலைஞர் என பேசி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்நிலையில் தென்மண்டல ஜோசியரின் கருணாநிதி தான் அடுத்த முதல்வர் என்ற வாக்கு நடக்க வேண்டும் என தொண்டர்கள்  ஆதரவு குரல் எழுப்பி வருகின்றனர்.மேலும் திமுக தொண்டர்களும் பொதுமக்களும் சற்று நிம்மதி மூச்சி அடைந்துள்ளனர்.