கஜா புயல் கரையை கடக்கத் தொடங்கியுள்ள நிலையில் நாகை திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பயங்கர காற்று வீசி வருவதுடன் மழையும் கொட்டி வருகிறது. பல இடங்களில் பலத்த காற்றில் வீட்டின் கூரைகள் பறந்து சென்றன.. நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் முற்றிலும் இருளில் மூழ்கியுள்ளன.

கஜா புயலின் தற்போதைய நிலை குறித்து செய்தியாளர்களிடம்பேசிய சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் புயல் கரையைக்கடக்கும்போது 100 முதல் 110 கி.மீ. வேகத்தில்காற்றுவீசும்எனவும், சிலசமயங்களில் 120 கி.மீவேகத்தில்காற்றுவீசக்கூடும்என்றுதெரிவித்தார்.

தற்போது கஜாபுயல் கரையை கடக்கத் தொடங்கியுள்ளது என்றும் கண் பகுதி அதிவிரைவில் கரையைத் தொடும் என்றும் அவர் தெரிவித்தார். தற்போது கடுமையான காற்று வீசி வருகிறது. வீடுகளில் மேற் கூரைகள் பறந்தன. மரங்கள் முறிந்து விழத் தொடங்கியுள்ளன.

இதே போல் மின் கம்பங்கள் சாய்ந்து வருகின்றன. இதையடுத்து இந்த மாவட்டங்கள் முழுவதும் இருளில் மூழ்கியுள்ளன.