மீண்டும் விஸ்வரூபம் எடுக்கப்போகும் கஜா..
கஜா புயலால் காரைக்கால், வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, தஞ்சாவூர் பகுதிகளை நாசமாக்கி, 82 ஆயிரம் பேர் வீடுகளை இழக்க, 1500 குடிசை வீடுகள் அழிந்து மக்கள் 471 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கடந்த இரண்டு நாட்களில் 45 பேரைக் காவு வாங்கிய கஜா புயல் பலம் குன்றி அரபிக்கடலில் சுழன்று கொண்டிருக்கிறது.

தற்போது 55-60 கி.மீ வேகத்தில் சுழன்று கொண்டிருக்கும் இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், இன்னும் 12 மணி நேரத்தில் மீண்டும் வலுப்பெறும் என்று வானிலை ஆராய்ச்சி நிலையம் இன்று அறிவித்துள்ளது. காற்றின் வேகம் 70-80 கி.மீ ஆக அதிகரிக்கும் எனவும், இதனால் கஜா மையம் கொண்டிருக்கும் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் அடுத்த 24 மணி நேரத்தில் பலத்த மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது.
இந்தக் காற்றின் வேகம் மேலும் தீவிரமடைந்து 100 கி.மீ என மாறுமா, கஜா மீண்டும் புயலாக உருவெடுக்குமா என்பது இன்னும் தெளிவாகவில்லை.