Asianet News TamilAsianet News Tamil

இந்தியாவையே திரும்பி பார்க்க வைக்கப்போகும் செங்கோட்டையனின் அடுத்த அதிரடி திட்டம்! என்னவென்று தெரியுமா?

K. A. Sengottaiyan next action plan to keep India looking back
K. A. Sengottaiyan next action plan to keep India looking back
Author
First Published Jul 18, 2018, 10:11 AM IST


தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் பயிற்சி யைமங்களை உருவாக்கும் செங்கோட்டையனின் திட்டம் ஒட்டு மொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைக்க உள்ளது. தற்போது ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் மாநிலம் முழுவதிலும் இருந்து சென்னை வந்தே தங்கள் பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். ஐ.ஏ.எஸ் பயிற்சி மையங்களும் புற்றீசல் போல் உருவாகி, மாணவர்களிடம் இருந்து ஏராளமாக பணம் கறந்து வருகின்றன. 

இவற்றுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைத்து திறமையான மாணவர்களுக்கு அவர்களின் மாவட்டங்களிலேயே ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கும் திட்டத்தை செங்கோட்டையன் அறிமுகம் செய்ய உள்ளார்.
இந்த திட்டம் மூலம் தமிழகத்தில் இருந்து அதிக எண்ணிக்கையில் ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகள் உருவாகும் நிலை இருக்கிறது. இது குறித்த சென்னையில் பேசிய செங்கோட்டையன், தமிழகத்தில் 32 மாவட்டங்களில் உள்ள மாவட்ட தலைநகரங்களிலும் ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் பயிற்சி மையங்கள் உருவாக்கப்படும் என்று கூறியுள்ளார். 

இந்த மையங்களில் திறன் வாய்ந்த 100 மாணவர்களை தேர்வு செய்து பயிற்சி அளிக்க உள்ளதாக அவர் தெரிவித்தார். யு.பி.எஸ்.சி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு தேவையான புத்தகங்கள் அதிக அளவில் மாவட்ட நூலகங்களுக்கு வாங்கப்படும். இந்த பயிற்சி மையங்கள் ஒட்டு மொத்த இந்தியாவுக்கே வழிகாட்டியாக இருக்கும். இந்த மையங்களில் கிராமப்புற மாணவர்கள் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு சிறந்த முறையில் பயிற்சி அளிக்கப்படும். தமிழக மாணவர்கள் இந்த பயிற்சி மையத்தை நல்ல முறையில் பயன்படுத்தி ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்று செங்கோட்டையன் கேட்டுக் கொண்டார்.

Follow Us:
Download App:
  • android
  • ios