junior world cup india won with australia
இந்திய அணி இளம் வீரர்களுக்கு தலா ரூ.20 லட்சம் பரிசு..!
ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா நான்காவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று இந்தியா சாதனைப்படைத்துள்ளது.
நியூசிலாந்தில் நடைபெற்ற ஜூனியர் உலகக்கோப்பை
19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்நிலையில், இந்திய அணி இளம் வீரர்கள் அனைவருக்கும் தலா ரூ.20 லட்சமும், பயிற்சியாளர் ராகுல் டிராவிட்-க்கு ரூ.50 லட்சம் பரிசு தொகையை பிசிசிஐ அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 47.2 ஓவரில் 216 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. பின்னர் விளையாடிய இந்தியா 38.5 ஓவரிலேயே 2 விக்கெட்டை மட்டுமே இழந்து 220 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது
பிரித்வி ஷா தலைமையிலான இந்திய அணிக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன
நாட்டின் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர், இந்திய அணி கேப்டன் விராட் கோலி உள்பட ஏராளமானோர் தொடர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜூனியர் வீரர்களின் அபார வெற்றியால்,சீனியர் வீரர்களும் அசந்து போய் உள்ளனர்.
