judge jagatheesh chanthira is a news reader and also judge who is investigate sv sekar case
தமிழக கவர்னர் பன்வாரிலால் செய்தியாளர்கள் சந்திப்பின் போது பெண் நிருபர் ஒருவரின் கன்னத்தில் செல்லமாக தட்டினார். இது பெரும் சர்ச்சையாக கிளம்பியது
இதையடுத்து தன் செயலுக்காக கவர்னர் மன்னிப்பு கேட்டார். இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி பா.ஜ.க. பிரமுகரும், நடிகருமான எஸ்.வி.சேகர், சமூக வலைதளத்தில் பெண் செய்தியாளர்களுக்கு எதிராக அவதூறான, கீழ்த்தரமான கருத்துகளை பதிவிட்டார். எஸ்.வி.சேகரின் செயலுக்கு பத்திரிகையாளர்கள் உள்பட பலதரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.அவர் மீது போலீசிலும் புகார் செய்யப்பட்டது.
மன்னிப்பு கேட்ட எஸ்வி சேகர்
மாவட்டம் தோறும் பத்திரிக்கையாளர்கள் எஸ்வி சேகர் மீது பல புகார்களை அளித்தனர்.இதையடுத்து எஸ்.வி.சேகர் மன்னிப்பு கோரினார். தனக்கு வந்த ஒரு பதிவை படித்துப் பார்க்காமல் அப்படியே தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுவிட்டதாக விளக்கம் அளித்தார். புகாரின் அடிப்படையில் எஸ்.வி.சேகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

முன் ஜாமீன்
இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வழங்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் எஸ்.வி.சேகர் மனு தாக்கல் செய்துள்ளார்.
சமூக வலைதளங்களில் வரும் செய்திகளை பொதுத்தளத்தில் பகிர்வது என்ற பழக்கத்தின் அடிப்படையில், இந்த செய்தியையும் முழுமையாக படித்துப்பார்க்காமல் அப்படியே பதிவு செய்துவிட்டேன். வேறு எந்த தவறையும் நான் செய்யவில்லை.இதற்காக பகிரங்க மன்னிப்பும் கோரியுள்ளேன் என குறிப்பிட்டு, முன் ஜாமீன் கேட்டு மனு அளித்துள்ளார்
மனுவை விசாரிப்பவரே செய்தி வாசிப்பாளர் தான்
எஸ்விசேகர் முன்ஜாமின் மனுவை விசாரிக்கும் நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, பிரபல தனியார் தொலைக்காட்சியில் செய்திவாசிப்பாளராக இருந்துள்ளார் என்பது பலர் அறியாத சுவாரஸ்யமான தகவல்

செய்திவாசிப்பாளர்களை அவதூறாக பேசிய வழக்கில் எஸ்.வி.சேகர் முன்ஜாமின் கோரிய மனு, நீதிபதி ஜெகதீஷ் சந்திராவிடம் விசாரணைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
இதன் மூலம் ஒரு செய்தி வாசிப்பாளரே, செய்தி வாசிப்பாளர் குறித்த விசாரணையில் ஈடுபட இருப்பது ஒரு ஆவலை ஏற்படுத்தி உள்ளது
எஸ்வி சேகருக்கு முன்ஜாமீன் கிடைக்குமா..? நீதிபதியின் உத்தரவு என்னவாக இருக்கும் என்பதே ஒட்டுமொத்த ஊடயவியளாரின் எண்ணமாக உள்ளது.
