Asianet News TamilAsianet News Tamil

பாஜக கூட்டணியில் இணையும் ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்!

ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சி பாஜக கூட்டணியில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

John pandian tamilga makkal munnetra kazhagam likely to alliance with bjp loksabha election 2024 smp
Author
First Published Feb 26, 2024, 1:55 PM IST | Last Updated Feb 26, 2024, 1:55 PM IST

ஜான் பாண்டியன், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை நடத்தி வருகிறார். பாஜக - அதிமுக கூட்டணி இருந்தவரை தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தனது ஆதரவை அவர் தெரிவித்து வந்தார். டெல்லியில் தமிழக கூட்டணி கட்சிகளுடன் பிரதமர் மோடி நடத்திய சந்திப்பின்போது, ஜான் பாண்டியன் உடனிருந்தார்.

இதனிடையே, பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக அதிமுக அறிவித்தார். பாஜக  உடன் கூட்டணி கிடையாது என எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக அறிவித்துள்ளார். எனவே, எதிர்வரவுள்ள மக்களவைத் தேர்தலில் ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் எந்த கூட்டணியில் இணைவது என்பது பற்றி தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை இன்னும் அறிவிக்காத அக்கட்சி, யாருடன் கூட்டணி வைக்கலாம் என கேட்டு கட்சி நிர்வாகிகளிடம் அண்மையில் வாக்கெடுப்பு நடத்தியது. அதன் முடிவுகள் வெளியிடப்படவில்லை. இருப்பினும், பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஒரு தொகுதியையாவது கேட்டு பெற்று விட வேண்டும் என ஜான் பாண்டியன் முனைப்பு காட்டி வருவதாக கூறப்பட்டது.

அதிமுகவிற்கு குட்பாய்... பாஜக கூட்டணியில் இணைந்த ஜி.கே.வாசன்- மோடி கூட்டத்தில் பங்கேற்பதாக அறிவிப்பு

இந்த நிலையில், ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சி பாஜக கூட்டணியில் இணைய முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாஜக கூட்டணியில் ஒரு தொகுதியில் போட்டியிட அக்கட்சி விருப்பம் தெரிவித்துள்ளதாக தெரிகிறது. ஒருவேளை பாஜக கூட்டணியில் சீட் ஒதுக்கப்பட்டால், ஜான் பாண்டியனின் மகள் வினோலின் நிவேதா களம் காண வாய்ப்புள்ளது.

முன்னதாக, பாஜக உடன் ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் மக்களவைத் தேர்தலுக்கான கூட்டணியை உறுதி படுத்தியுள்ளது. நாளை பல்லடத்தில் பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதாகவும் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார். இதையடுத்து, கூட்டணியில் இணைந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசனை சந்தித்து பாஜக மாநிலத் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்து புகழாரம் சூட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios