jio announced deepavali offer
தீபாவளி பம்பர் ஆபர்...! பட்டாசு கிளப்பும் ஜியோ...!
என்னடா இன்னும் ஜியோ எதுவும் அறிவிக்க வில்லையே என வாடிக்கையாளர்கள் பெருமூச்சி விடுவதற்குள்...தீபாவளி ஆப்பராக சூப்பர் சலுகையை ஜிபோ அறிவித்துள்ளது
இதற்கு முன்னதாக ஜியோ தண் தணாதண் என்ற திட்டத்தை அறிமுகம்செய்தது.
இதில்,ரிலையன்ஸ் ஜியோ தீபாவளி சலுகையாக தண் தணா தண் திட்டத்தில் சில சூப்பர் சலுகையை அறிவித்து உள்ளது.இதில் ரீசார்ஜ் செய்யும் போது 100 சதவிகிதம் கேஷ்பேக் வழங்கப்படுகிறது என்பது தான் ஹைலைட்
100 சதவீதம் கேஷ்பேக் பெறுவது எப்படி?
இந்த கேஷ்பேக் பெறுவதற்கு,கூப்பன்கள் வழங்கப்படும். இந்த கூப்பன்களை ஐந்து முறையாக பயன்படுத்திக்கொள்ளலாம்.அதாவது ஒவ்வொரு ரீசார்ஜ் செய்யும் போது, ஒவ்வொரு கூப்பன்களை பயன்படுத்திக் கொள்ளலாம்

எப்பொழுது பயன்படுத்தலாம்?
அக்டோபர்12-ம் தேதி துவங்கி அக்டோபர் 18-ம் தேதி வரை மட்டும் தான் இந்த கூப்பன்களை பெற முடியும்
ஒரு கூப்பனின் மதிப்பு ரூ.50
இந்த கூப்பன்களை நவம்பர் 15-ம் தேதி முதல் பயன்படுத்திக்கொள்ளலாம்.
குறிப்பு :
ஜியோவின் மற்ற சலுகைகளை பயன்படுத்தி வந்தால்,அந்த சலுகை எப்பொழுது முடிகிறதோ அன்று முதல் இந்த கேஷ்பேக் சலுகையை பயன்படுத்திக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது
தீபாவளியையொட்டி ஜியோ வழங்கிய இந்த அற்புத சலுகையால் வாடிக்கையாளர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
.
