ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடியதன் மூலம் உலகளவில் பிரபலமான ஜிமிக்கி கம்மல் ஷெரிலுக்கு திருமணம் நிச்சயமானது ரசிகர்களை சந்தோஷம் கலந்த அதிர்ச்சியில் உள்ளனர்.

இணையத்தில் ஒரே நாளில் உலக அளவில் பிரபலமாவதற்கு குறிப்பிட்ட எந்த வழிமுறைகளும் இல்லை. ஆனால் இந்த வரவேற்பை சம்பந்தப்பட்டவர்களே துளியும் எதிர்பார்த்திருப்பதில்லை என்பதுதான் இதன் சிறப்பம்சம். ஓவியா, ஷெரில், பிரியா வாரியர் என தொடர்ந்து கேரளாவைச் சேர்ந்தவர்களையே வலைதளங்களில் டிரெண்டிங்கில் இருந்து வந்தனர்.

கல்லூரிப் பேராசிரியரான ஷெரில் கல்லூரி விழாவில் ஆடிய நடனம் அவருக்கு எதிர்பாராத வரவேற்பையும் வாய்ப்புகளையும் பெற்றுத்தந்துள்ளது. ஷெரில் தற்போது There is no goodbye என்ற இசை ஆல்பத்தில் நடித்துள்ளார். இந்த ஆல்பம் சில தினங்களுக்கு முன் வெளியாகியுள்ளது. மலையாளத்தில் பல படங்களுக்கும், சென்னையில் ஒரு நாள் படத்திற்கும் இசையமைப்பாளராகப் பணிபுரிந்த மெஜ்ஜோ ஜோசப் இசையமைத்துள்ளார். ஷியாம் குமார் இயக்கியுள்ளார். ஒய்ட்வே புரொடக்‌ஷன் தயாரித்துள்ளது.

தற்போது இசை ஆல்பங்கள் மற்றும் திரைவாய்ப்புகள் ஒரு புறம் வந்தாலும் ஷெரில் திருமண பந்தத்தில் இணைய முடிவெடுத்துள்ளார். ஷெரிலுக்கும் கேரளாவைச் சேர்ந்த ப்ரஃபுல் டோமி அமம்துருத்தில் என்பவருக்கும் சமீபத்தில் எளிமையான முறையில் நடைபெற்ற இந்த நிச்சயதார்த்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.

மாப்பிள்ளை டோமி கேரளாவின் தொடுப்புழா பகுதியைச் சேர்ந்தவர். தமிழ், மலையாளம், தெலுங்கு சினிமாவில் நடிக்க வந்த  வாய்ப்புகளை மறுத்த ஷெரில், இவ்வளவு  விரைவாக திருமணம் செய்துகொள்வது ரசிகர்களை சந்தோஷம் கலந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.