Asianet News TamilAsianet News Tamil

இரங்கல் தெரிவிக்க வந்தவர்களிடம் நகை, செல்போன் திருட்டு; இப்படியும் சில மனிதர்கள்!!!

மதுரையில், இரங்கல் நிகழ்ச்சிக்கு வந்தவர்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டி நகை, பணம், செல்போன் திருடப்பட்டுள்ளது. 

Jewelery and cell phone theft who came for death

திண்டுக்கல் மாவட்டம், விநாயகர் நகரைச் சேர்ந்தவர் குமார் (56). இவர் மதுரையில் உள்ள உறவினர் ஒருவர் இறந்துவிட்டதால் இரங்கல் நிகழ்ச்சிக்காக நேற்று மதுரைக்கு வந்துள்ளார். 

dead க்கான பட முடிவு

இரங்கல் நிகழ்ச்சி முடியும்வரை இருக்கும் திட்டத்தோடு மதுரைக்கு வந்த குமார், வைகையாற்றில் நடைப்பெற்ற இரண்டாம் நாள் இரங்கல் நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார். இரங்கல் முடிந்தபிறகு வைகையாற்றில் இவரும், இவரது உறவினர் ஒருவரும் தனியாக நடந்து வந்துக் கொண்டிருந்தனர்.

அப்போது, அங்கு வந்த மர்ம நபர்கள் மூன்று பேர், கத்தியைக் காட்டி மிராடி குமார் மற்றும் அவரது உறவினர் ரமேஷ் இருவரிடமும் இருந்து 2 சவரன் நகைகள், ரூ.2000 மற்றும் ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள 3 செல்போன்களை திருடிக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.

valipari க்கான பட முடிவு

உயிர் தப்பினால் போதும் என்று தன்னிடம் இருந்த பணம், நகை, செல்போன் என அனைத்தையும் கொடுத்துவிட்டு குமாரும், ரமேஷும் அங்கிருந்து ஓடிவந்தனர். இதுகுறித்து உறவினர்களிடமும், காவல் நிலையத்திலும் புகார் கொடுத்தனர்.

புகாரின்பேரில் கரிமேடு காவலாளர்கள் வழக்குப்பதிந்து வழிப்பறி நடந்த இடத்தைப் பார்வையிட்டனர். பின்னர், இதுகுறித்து குமார், ரமேஷிடம் விசாரணை நடத்தினர். கத்தியைக் காட்டி மிரட்டி பணம், நகை, செல்போனை பறித்துக் கொண்டு தப்பிய மர்ம நபர்களை காவலாளர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.

police investigation க்கான பட முடிவு

இரங்கல் நிகழ்ச்சிக்கு வந்தவர்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டி நகை, பணம், செல்போன் திருடப்பட்ட சம்பவம் இந்தப் பகுதியில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios