புதுக்கோட்டை 

வீட்டில் தனியாகத் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் இருந்து 7 சவரன் தாலிச்சங்கிலியைக் கொள்ளையன் ஒருவன் பறித்துவிட்டான். அவரை தீவிரமாகத் தேடிவந்த காவலாளர்கள் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

pudukkottai name board க்கான பட முடிவு

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேவுள்ளது அரசடிப்பட்டி. இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்டீபன்பிரபு. வெளிநாட்டில் வேலைப் பார்க்கும் இவருக்கு மரியாபிரேமா என்ற மனைவி உள்ளார். மரியாபிரேமா தனது மாமனார், மாமியாருடன் ஒன்றாக வசித்து வருகிறார். 

இந்த நிலையில் வீட்டில் உள்ள ஒரு அறையில் இரவு தூங்கிக் கொண்டிருந்தார் மரியாபிரேமா. தனி அறையில் இருந்தபோது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர் மரியா பிரேமாவின் கழுத்தில் கிடந்த 7 சவரன் தாலிச்சங்கிலியை சட்டென்றுப் பறித்தார். 

theft க்கான பட முடிவு

இதில் பதறி எழுந்த மரியாபிரேமா, "திருடன்! திருடன்!" என்று அலறினார். இதனால் வீட்டின் மற்ற அறைகளில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் ஓடிவந்து திருடனைப் பிடிக்க முயன்றனர். ஆனால், அதற்குள் அந்த கொள்ளையன் தாலிச்சங்கிலியுடன் தப்பி ஓடிவிட்டார்.

பின்னர் விடிந்ததும் இதுகுறித்து மரியாபிரேமா ஆலங்குடி காவல் நிலையத்திற்கு நேறில் சென்று புகார் கொடுத்தார். அப்புகாரின்பேரில் வழக்குப்பதிந்த காவலாளர்கள் கொள்ளையனைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். 

theft க்கான பட முடிவு

காவலாளர்கள் நடத்திய விசாரணயில் புதுக்கோட்டை மாவட்டம், தெற்குச் சந்தைப்பேட்டை பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் (26) என்பவர்தான் மரியாபிரேமாவின் தாலிச்சங்கிலியைப் பறித்தது தெரியவந்தது. இதனையடுத்து ரவிச்சந்திரனை மடக்கிப் பிடித்து கைது செய்த காவலாளர்கள் அவரை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து சிறையில் அடைத்தனர்.