மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை தொடர்பாக அப்பல்லோ நிர்வாகத்துக்கு நிலுவைத் தொகையை அதிமுக பைசல் செய்துள்ளது. 

ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். 75 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி காலமானார். அவருக்கு சிகிச்சை அளிப்பதற்காக 6 கோடியே 44 லட்சம் செலவாகியதாகவும், அதில் 6 கோடி மட்டுமே செலுத்தப்பட்டிருப்பதாகவும், கடந்த சில நாட்களுக்கு முன் ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவமனை சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

 

இந்நிலையில், அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் நிலுவைத் தொகையாக குறிப்பிடப்பட்டிருந்த 44 லட்சத்து 56 ஆயிரத்து 209 ரூபாய் பணத்தை அதிமுக தலைமை வழங்கியுள்ளது. அதன்படி, நிலுவையில் இருந்த ஜெயலலிதாவின் மருத்துவக் கட்டணம் முழுமையாக செலுத்தப்பட்டு விட்டதாக அதிமுக தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.