jayalalitha relaation lalitha said about soban babu

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மகளாக கூறப்படும் அம்ருதாவின் தந்தை சோபன்பாபு தான் என, ஜெயலலிதாவின் அத்தை மகளான லலிதா புதிய தகவலை அளித்துள்ளார் 

ஜெயலலிதாவுக்கு பிறந்ததாக கூறப்படும் பெண் குழந்தையின் தந்தை நடிகர் சோபன்பாபு என்று பெங்களூருவில் வசிக்கும் ஜெயலலிதாவின் அத்தை மகள் லலிதா தெரிவித்துள்ளார். 1980-ம் ஆண்டு ஜெயலலிதா பிரசவத்தின் போது சோபன்பாபு உடனிருந்தார் என்று அவர் தெரிவித்தார்.

பெங்களூருவைச் சேர்ந்த மஞ்சுளா (எ) அம்ருதா உச்சநிதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், தான், ஜெயலலிதாவின் மகள் என்றும், இதனை நிரூபிப்பதற்கு எனக்கு டி.என்.ஏ. பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார். ஜெயலலிதாவின் உடலைத் தோண்டி எடுத்து, டிஎன்ஏ சோதனை நடத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ள மஞ்சுளா, ஜெயலலிதாவின் உடலுக்கு வைஷ்ணவ ஐயங்கார் முறைப்படி இறுதிச்சடங்கு நடத்தப்படவில்லை என்பதால் வைஷ்ணவ ஐயங்கார் முறைப்படி அவருக்கு இறுதிச்சடங்கு செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் அம்ருதா தனது மனுவில் கூறியிருந்தார்.

மேலும் அந்த மனுவில் 1980 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14 ஆம் தேதி ஜெயலலிதாவின் மகளாக பிறந்தேன். ஜெயலலிதாவின் அத்தை ஜெயலட்சுமி தான் பிரசவம் பார்த்தார். ஜெயலலிதாவுக்கு அவப்பெயர் ஏற்படும் என்பதற்காக இந்த உண்மை வெளிப்படுத்தப்படவில்லை என கூறியுள்ளார். எனது வளர்ப்பு தாயான ஜெயலலிதாவின் சகோதரி ஷைலஜா 2015 ஆம் ஆண்டு இறந்து விட்டார். வளர்ப்பு தந்தையான சாரதி இந்த ஆண்டு மார்ச் 20 ஆம் தேதி இறந்து விட்டார். இவ்வாறு அம்ருதா தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார் 

இந்த நிலையில் அம்ருதாவின் மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அம்ருதாவின் மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள்,அம்ருதாவின் மனுவை தள்ளுபடி செய்தனர். பெங்களூரு நீதிமன்றத்தை நாட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. 

இந்நிலையில் அம்ருதா தான் உண்மையான மகளா என்ற கேள்வி எழும் வகையில், ஜெயலலிதாவின் உறவினரான லலிதா தெரிவித்துள்ளது மேலும் ஒரு சர்ச்சையை கிழப்பி உள்ளது.இதில் குறிப்பாக சோபன் பாபு தான், ஜெயலலிதாவிற்கு பிறந்த குழந்தைக்கு அப்பா எனவும் தெரிவித்து உள்ளார்.

ஆனால் இதுவரை அம்ருதா ஜெயலலிதாவின் மகள் தான் என்பதையும் நிரூபிக்க படவில்லை.டி என்ஏ டெஸ்ட் எடுக்கவும் வாய்ப்பு இல்லை.. ஒரு வேளை ஜெயலலிதாவின் மகள் அம்ருதாவாக இருந்தால்,ஜெ உறவினர் லலிதா சொல்வது போல சோபன் பாபு தான் அவருடைய அப்பாவா? என்பதும் தெரியவில்லை.

 ஆக மொத்தத்தில் ஜெயலலிதா மரணமும் மர்மமாக உள்ளது என்றும்,அவருக்கு மகள் இருக்கிறாரா என்பதும் மர்மமாகவே உள்ளது என மக்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்