Asianet News TamilAsianet News Tamil

ஜெ., மரணம்... எக்மோ கருவியை அகற்ற சொன்னது யார்? எய்ம்ஸ் மருத்துவர்களிடம் கிடுக்குப்பிடி விசாரணை!

ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த எய்ம்ஸ் மருத்துவர்கள் 3 பேர் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆஜராகியுள்ளனர். அவர்கள் விசாரணை ஆணையத்தில் விளக்கம் அளித்து வருகின்றனர். இந்த விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Jayalalitha Probe case 3 AIIMS Doctors
Author
Chennai, First Published Aug 23, 2018, 11:45 AM IST

ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த எய்ம்ஸ் மருத்துவர்கள் 3 பேர் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆஜராகியுள்ளனர். அவர்கள் விசாரணை ஆணையத்தில் விளக்கம் அளித்து வருகின்றனர். இந்த விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக ஜெயலலிதா மரணம் தொடர்பாக தமிழக அரசு விசாரணை ஆணையம் அமைத்தது. இந்த ஆணையம் சார்பில் ஜெயலலிதா, சசிகலா உறவினர்கள், அரசு டாக்டர்கள், அப்போலோ டாக்டர்கள் என இதுவரை 85 பேரிடம் நீதிபதி விசாரணை நடத்தப்பட்டுள்ளது. Jayalalitha Probe case 3 AIIMS Doctors

இந்நிலையில் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவனையில் சிகிச்சை பெற்ற போது எய்ம்ஸ் மருத்துவர்கள் ஜி.சி.கில்னாணி, அஞ்சன்டிரிகா, நிதிஷ் நாயக் ஆகியோர் ஆஜராக ஆணையம் சார்பில் கடந்த வாரம் சம்மன் அனுப்பப்பட்டது. அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்த போது, எய்ம்ஸ் டாக்டர்கள் வர வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை சார்பில் மத்திய அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் எய்ம்ஸ் டாக்டர்கள் வருகை தந்தனர். அவர்கள் ஜெயலலிதாவுக்கு சிகிச்சைகள் அளித்தனர். ஜெயலலிதாவுக்கு வழங்க வேண்டிய சிகிச்சைகள் குறித்து அப்போலோ மருத்துவர்களுக்கு ஆலோசனையும் வழங்கினர். அவர்கள் 3 முறை அப்போலோ மருத்துவமனை வந்தனர். Jayalalitha Probe case 3 AIIMS Doctors

ஆனால் டிசம்பர் 4ம் தேதி ஜெயலலிதாவுக்கு திடீரென கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து மீண்டும் எய்ம்ஸ் டாக்டர்கள் அப்போலோ மருத்துவமனைக்கு வந்தனர். அவர்கள் தான் ஜெயலலிதாவுக்கு பல கட்ட சிகிச்சை அளித்த பிறகும், உடல் நிலையில் முன்னேற்றம் இல்லை எனக்கூறி எக்மோ கருவி அகற்றுமாறு அப்போலோ டாக்டர்களுக்கு அறிவுரை வழங்கியதாக கூறப்படுகிறது. டிசம்பர் 5-ம் தேதி அவர் இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது.

Jayalalitha Probe case 3 AIIMS Doctors

எனவே, இது தொடர்பாக எய்ம்ஸ் டாக்டர்களிடம் விசாரணை நடத்தினால் பல உண்மைகள் வெளிச்சத்துக்கு வரலாம் என்ற அடிப்படையிலேயே சம்மன் அனுப்பியிருப்பதாக விசாரணை ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில், எய்ம்ஸ் டாக்டர்கள் 3 பேரும் இன்று காலை 10 மணியளவில் நீதிபதி ஆறுமுகசாமி முன்னிலையில் ஆஜராகி விளக்கமளித்து வருகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios