முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா நேற்று இரவு 11.30 மணியளவில் சென்னை அப்போல்லோ மருத்துவமனையில் காலமானார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இதனையடுத்து அவரது உடல் போயஸ் கார்டன் இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டு இறுதி சடங்குகள் நடைபெற்றன.

பின்னர் ராஜாஜி அரங்கத்தில் முதல்வர் ஜெ உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அதிகாலை முதலே லட்சகணக்கானோர் வரிசையில் நின்று கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

பல்லாயிரகணக்கான தொண்டர்கள் முதல்வரின் மறவைவை தாங்க முடியாமல் கதறி அழுதனர். தொடர்ந்து லட்சகணக்கானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.