முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக தனி விமானம் மூலம் சென்னை வந்த பிரதமர் மோடி பல்லாயிரக்கணக்கான மக்களின் கண்ணீருக்கு மத்தியில் அஞ்சலி செலுத்தினார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

அப்போது கதறி அழுது கொண்டிருந்த முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வத்தை கட்டி தழுவி ஆறுதல் கூறினார். அருகில் இருந்த ஜெயலலிதாவின் தோழி சசிகலாவிடமும் பிரதமர் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார்.

இதனையடுத்து சசிகலாவின் தலையில் கை வைத்து ஆறுதல் சொன்ன மோடி தமிழகத்திற்கு எல்லா உதவிகளையும் தமிழகத்திற்கு வேண்டிய எல்லா உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாக உறுதியளித்தார்.