அனைத்து அரசியல் பணிகளையும் செய்யும் அளவிற்கு முதல்வர் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என அதிமுக செய்தி தொடர்பாளர் பொன்னையன் தெரிவித்துள்ளார்.
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி முதல் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் முதல்வரின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், எனவே அவர் சிறப்பு வார்டுக்கு மாற்றப்படுகிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இன்று சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அதிமுக செய்தி தொடர்பாளர் பொன்னையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர்.
முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. முதலமைச்சருக்கு நுரையீரல் தொற்று பூரணமாக குணமாகியுள்ளது என்று தெரிவித்தார்.
மேலும், அனைத்து அரசியல் பணிகளையும் செய்யும் அளவிற்கு முதல்வர் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றும், பிசியோதெரபி சிகிச்சையால் ஏற்பட்ட கை வலியின் காரணமாகவே வேட்புமனுவில் கைரேவை வைக்கப்பட்டது தற்போது அந்த நிலையிலிருந்தும் முதல்வர் முன்னேறிவிட்டார் என பொன்னையன் தெரிவித்தார்.
முதலமைச்சரின் உடல்நிலை குறித்து கேட்டறிய சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு நடிகை விஜயசாந்தி பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது , முதலமைச்சர் நலமுடன் உள்ளதாகவும், முதலமைச்சர் விரைவில் பூரண குணமடைய இறைவனை பிராத்திப்பதாகவும் தெரிவித்தார்.
