முதலமைச்சர் ஜெயலலிதா காலமானதாக வெளியான தகவலை அப்போல்லோ மருத்துவமனை மறுத்துள்ளது.
முதல்வர் ஜெயலலிதா அப்போல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர் காலமானதாக தகவல்கள் வெளியாகின.
தொலைக்காட்சிகள் அவர் மரணமடைந்ததாக அறிவிப்பு வெளியிட்டன. ஆனால் இந்த தகவல் முற்றிலும் தவறானது என்றும் ஜெயலலிதா தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் அப்போல்லோ நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அப்போல்லோ மருத்துவர்களும் எய்ம்ஸ் மருத்துவர்களும் முதலமைச்சருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் காலமானதாக தகவல் வெளியானதால் ராயபேட்டை தலைமை கழக அலுவலகத்தில் அஇ அதிமுக கொடி அரை கம்பத்தில் பறக்க விடப்பட்டது.
இந்நிலையில் கழக தொண்டர்கள் கொடியை மீண்டும் ஏற்றி வைத்து முதலமைச்சர் வாழ்க என்றும் முழக்கமிட்டு வருகின்றனர்.
