முதலமைச்சர் ஜெயலலிதா அப்போல்லோ மருத்துவமனையில் கடந்த 70 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்று வரும் நிலையில் நேற்று திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து முதலமைச்சருக்கு அப்போல்லோ மருத்துவர்களும் டெல்லியில் இருந்து வந்துள்ள எய்ம்ஸ் மருத்துவர்களும் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் தந்தி டிவியின் தலைமை செய்தியாளர் ரங்கராஜ் பாண்டே அடிப்படை ஆதாரம் எதுவும் இல்லாமல் திடீரென முதலமைச்சர் ஜெயலலிதா காலமாகி விட்டதாக தவறான தகவல்களை வெளியிட்டார்.

இதனை தொடர்ந்து மற்ற தமிழ் தொலைக்காட்சிகளும் முதலமைச்சர் மரணமடைந்து விட்டதாக அறிவித்தன. ஆனால் முதலமைச்சருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருவதாகவும் ஊடகங்களில் வெளியான தகவல்கள் தவறானவை என்றும் அப்போல்லோ நிர்வாகம் மறுப்பு தெரிவித்தது.

தந்தி டிவியின் ரங்கராஜ் பாண்டேவின் இந்த செயல் பொறுப்பற்றது என்று சமூக வலைதளங்களில் கடும் கண்டனம் தெரிவிக்கபட்டுள்ளது.இதனால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளதாகவும் சமூக வலைதளங்களில் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் டிஆர்பி ரேட்டிங்கிற்காக இது போன்ற செயலை செய்து வருவதாகவும் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.