முதல்வர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டது முதல் இன்றுவரை இல்லாத அளவுக்கு வரலாறு காணாத அளவுக்கு தொண்டர்கள் குவிந்துள்ளனர். தனது தலைவிக்கு என்ன ஆனதோ என்ற பதை பதைப்பில் தொண்டர்கள் அலை அலையாய் வந்த வண்ணம் உள்ளனர்.
முதல்வர் ஜெயலலிதா கடந்த செப் 22 உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22-ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரது உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் கிளம்பிய நிலையில் விரைவாக குணமடைந்து வந்தார். விரைவில் அவர் டிஸ்சார்ஜ் ஆவார். டிஸ்சார்ஜ் தேதியையும் அவரே முடிவு செய்வார் என்று அப்போலோ மருத்துவக் குழுமத் தலைவர் பிரதாப் ரெட்டி தெரிவித்து இருந்தார்.
முதல்வருக்கு அனைத்து சிகிச்சைகளும் முடிவடைந்த நிலையில் பிசியோதெரபி சிகிச்சை பெற்றுவந்தார். நடப்பதற்கான பயிற்சி எடுத்துவந்த நிலையில் ஓரிரு நாளில் டிஸ்சார்ஜ் ஆவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் நேற்று மாலை முதல்வருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது.
இதையடுத்து இதயநோய், சுவாசவியல் மற்றும் தீவிர சிகிச்சை நிபுணர்கள் அடங்கிய குழு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தது. நேற்று முதல்வருக்கு சிறிய அளவிலான அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. தொடர்ந்து தீவிர சிகிச்சை கண்காணிப்பில் முதல்வர் இருக்கிறார்,என்ற தகவல் தரப்பட்டது.

ஆனால் நேரம் செல்ல செல்ல அனைத்து நம்பிக்கைகளையும் தகர்க்கும் வண்ணம் ஒவ்வொரு நிகழ்வாக நடந்து வருகிறது. முதல்வர் உடல்நிலை மிக மோசமாக இருப்பதாக அப்போலோவே அறிக்கை தருகிறது. ரிச்சர்ட் பேல் நாங்கள் எங்களால் முடிந்தவரை முயற்சித்துவிட்டோம் என்று அறிக்கை தருகிறார்.
இதனால் பதற்றமடைந்த தொண்டர்கள் அலை அலையாய் பக்கத்து மாவட்டங்களிலிருந்து அப்போலோ நோக்கி குவிந்து வருகின்றனர். இதனால் அப்போலோ அமைந்துள்ள கிரீம்சாலை தொண்டர்கள் தலைகளாக காட்சி அளிக்கிறது. அப்போலோ உள்ளேயும் கடல் போல் தொண்டர்கள் குவிந்துள்ளனர்.
எந்த நேரமும் எதுவும் நடக்கலாம் எனபதால் ஆயிரக்கணக்கில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
