Asianet News TamilAsianet News Tamil

ஜெயலலிதாவின் சொத்துக்கள் அரசுடைமை ஆக்கப்படுமா? உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை..

jayalalitha asset
Author
First Published Jan 12, 2017, 7:22 AM IST

ஜெயலலிதாவின் சொத்துக்கள் அரசுடைமை ஆக்கப்படுமா? உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை..

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்துகளை, அரசுடமையாக்க உத்தரவிடக் கோரி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில், பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இம்மனு, இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வருகிறது.

மக்களால் நான்…மக்களுக்காவே நான் என அடிக்கடி கூறியவர் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா. அதுமட்டுமல்ல எனக்கென யாரும் இல்லை..எனக்கு மக்களாகிய நீங்கன் மட்டும்தான என உணர்ச்சி மேலிட ஜெயலலிதா பேசும்போதெல்லாம்..அம்மா உங்களுக்காக நாங்கள் இருக்கிறோம் என அதிமுக தொண்டர்கள் உருகுவார்கள்.

அப்படி அதிமுக தொண்டாகளையே தனது உறவுகளாக நினைத்து வாழ்ந்து வந்தவர் ஜெயலலிதா. ஆனால் அவரின் திடீர் மறைவு தொண்டர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது,

ஜெயலலிதா, சினிமா துறையில் பிரபலமாக இருந்து கோடிக்கணக்கான ரூபாய் சம்பாதித்துள்ளார். தற்போது அவருடைய சொத்து மதிப்பு பல கோடி ரூபாய் பெறும்.

ஆனால் ஜெயலலிதாவுக்கு வாரிசு இல்லை எனபதாலும், தனக்கும் பிறகு தனது சொத்துக்கள் யாருக்கு சேரும் என அவர் அறிவிக்காததாலும் அந்த கோடிக்ணக்கானரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் றாருக்கு சொந்தம் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் ஜெயலலிதாவின் சொத்துகளை, அரசுடமையாக்க உத்தரவிடக் கோரி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில், பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மதுரை பொது நல வழக்குகள் மைய நிர்வாக அறங்காவலர், ரமேஷ் என்பவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

அதில் 'மக்களால் நான்; மக்களுக்காகவே நான்' என, ஜெயலலிதா அடிக்கடி குறிப்பிடுவார். அவரது அசையும், அசையா சொத்துகளை, அரசுடமையாக்க வேண்டியது அவசியம்.

இதன்மூலம் வரும் வருவாயை, ஏழைகளின் நலன்களுக்காக பயன்படுத்தலாம்.

எனவே, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில், குழு அமைத்து, ஜெயலலிதாவின் சொத்துகளை அடையாளம் கண்டு, விபரங்களை அறிக்கையாக, தாக்கல் செய்யவேண்டும் என்றும் அதன் அடிப்படையில் ஜெயலலிதாவின் சொத்துக்களை கையகப்படுத்தி, அரசுடமையாக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மனு இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வருகிறது. 

Follow Us:
Download App:
  • android
  • ios